இலவச தையல் எந்திரங்களை பெற பெண்கள் விண்ணப்பிக்கலாம்

சத்தியவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் எந்திரம் வழங்கும் திட்டம்

இத்திட்டத்தின் மூலம் கைம்பெண்கள் (விதவை), ஆதரவற்ற கைம்பெண்கள், கணவரால் கைவிடப்பட்ட பெண்கள் மற்றும் பொருளாதாரத்தில் நலிவுற்ற பெண்கள் ஆகியோருக்கு இலவச தையல் எந்திரம் வழங்கப்பட்டு வருகிறது.

எப்படி விண்ணப்பிப்பது

இத்திட்டத்தில் பயன்பெற தகுதியான நபர்கள் விண்ணப்பங்களை அரசு சேவை மையங்கள் மூலம் இணையதள வழியில் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்
  • விண்ணப்பிப்பவர்கள் வருமான சான்று,
  • வயது வரம்பு 20 முதல் 40 வயதுக்குள் இருக்க வேண்டும்.
  • கைம்பெண்கள் விதவை சான்று,
  • கணவரால் கைவிடப்பட்டவராயின் அதற்கான சான்று,
  • தையல் பயிற்சி சான்று,
  • பாஸ்போர்ட் அளவு புகைப்படம் -2,
  • சாதி சான்றிதழ்,
  • இருப்பிட சான்றிதழ்,
  • ஆதார் அட்டை மற்றும் குடும்ப அட்டை
  • ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
வயது சான்றுக்கு கல்விச்சான்று அல்லது பிறப்பு சான்றை பயன்படுத்தலாம். ஆகிய சான்றுகளுடன் அரசு இ-சேவை மையங்களில், இணையதள வழியில் விண்ணப்பிக்கலாம். குறைந்தது 6 மாத கால தையல் பயிற்சி முடித்திருக்க வேண்டும், என்று மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார். எப்பொழுது கிடைக்கும் இ-சேவை மூலம் நீங்கள் விண்ணப்பித்த பிறகு உங்களுக்கு SMS வரும் அதன் பின் 3 மாதங்களுக்குள் நீங்கள் தையல் இயந்திரத்தை பெற்று கொள்ளலாம் என அரசு அறிவித்துள்ளது.
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments