மகளிருக்கான சிறப்பு திட்டமாக மகளிர் மதிப்பு திட்டம். இத்திட்டத்தை பற்றி விரிவாக இச்செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.
இந்திய அஞ்சல் துறை சார்பாக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்ட வருகிறது.
அதில் முக்கிய திட்டமாகவும், குறிப்பாக பெண்களின் நலன் காக்கவும், அஞ்சலகங்களில் மகத்தான சேமிப்பு திட்டமாக மகளிர் மதிப்பு திட்டம் தற்போது செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டம் குறித்து முழு விவரங்களையும் நம்மிடம் பகிர்ந்துள்ளார் விழுப்புரம் மாவட்டம் உதவி அஞ்சலக தலைவர் சாதிக்பாஷா.
மத்திய அரசாங்க மூலம் மகளிர் நலன் காக்க அஞ்சலகங்களில் மகத்தான சேமிப்பு திட்டமாக” மகளிர் மதிப்பு திட்டம் ” செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டத்திற்கு வட்டி விகிதமாக 7.5 சதவீதம் பெறப்படுகிறது.
திட்டத்தின் காலம் 2 ஆண்டுகள் ஆகும். அதிகபட்ச முதலீடாக இரண்டு லட்சமாகும்.
குறைந்தபட்சம் ஆயிரம் ரூபாய் ஆகும். இத்திட்டத்தில் அனைத்து பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் சேரலாம்.
ஒரு நபர் எத்தனை கணக்குகள் வேண்டுமானாலும் துவங்கலாம்.