அனைவரும் கண்டிப்பாக போக வேண்டிய ஊட்டி ரயில், டிக்கெட் எப்படி புக் பண்ணனும் தெரியுமா?

இந்தியாவிலேயே மிக மெதுவான ரயில் என்றால் அது நம்ம நீலகிரியில் ஓடும் மேட்டுப்பாளையம் டூ ஊட்டி ரயில் தான். இந்த ரயிலுக்கு டிக்கெட் எடுப்பது எப்படி? இதற்கான கட்டணம் எவ்வளவு என்பதை பார்ப்போம்.

யுனெஸ்கோ பாரம்பரிய சின்னமாக ஊட்டி ரயிலை அறிவித்துள்ளார்கள். இந்தியாவிலேயே மிக மெதுவான ரயில் என்று பார்த்தால் அதுவும் இந்த ரயில் தான். இந்தியாவில் ஓடும் ஒரு சில நீராவி என்ஜின் ரயில்களில் இதுவும் ஒன்றாகும்.

இந்த ஊட்டி ரயிலில் பயணித்தால் நிறைய அற்புதமான விஷயங்களை பார்த்தபடி பயணிக்க முடியும். இந்த ரயில் செல்லும் பாதையில் 200க்கும் மேற்பட்ட பாலங்கள், 100க்கும் மேற்பட்ட வளைவுகள், குகைகள் என எல்லாவற்றையும் கடந்து போவதாக இருக்கும்.

ஊட்டி ரயில் என்பது மேட்டுப்பாளையத்தில் இருந்து தினமும் காலை 7.10க்கு கிளம்பி, காலை 11.55 மணிக்கு ஊட்டி செல்லும். முன்னதாக குன்னூருக்கு இந்த ரயில் 10.30க்கும், அரவங்காட்டிற்கு 10.59க்கும், கேத்திக்கு 11.19க்கும், லவ்டேலுக்கு 11.39க்கும் இறுதியாக ஊட்டிக்கு 11.55 க்கும் போகும்.

அதேபோல் மறுமார்க்கமாக ஊட்டியில் இருந்து பிற்பகல் 2.25க்கு புறப்படும் நீலகிரி மலை ரயில், மாலை 5.35க்கு மேட்டுப்பாளையம் சென்றடையும் . சென்னையில் இருந்து கிளம்பி வருகிறார்கள். நீலகிரி ரயிலில் ஏறி வந்தால், கோவை வழியாக மேட்டுப்பாளையம் வரும். மே. இல்லை பேருந்தில் வந்தால் கோவை போக வேண்டியதில்லை. அவினாசியில் இறங்கி மேட்டுப்பாளையத்திற்கு வரவேண்டும் காலை 7.10க்கு இரயில் கிளம்பிவிடும்

மேட்டுப்பாளையம் ரயில் நிலையம் வந்து பார்த்தால் நீராவி என்ஜினில் இயக்குவதற்கு நீலகிரி மலை ரயிலை தயார் நிலையில் வைத்துக்கொண்டிருப்பார்கள். அதுபார்க்கவே அற்புதமாக இருக்கும். இந்த ரயிலில் குன்னூர் செல்லவே நான்கு மணி நேரம் ஆகும் என்றாலும் போகும் வழி எல்லாம் எல்லா இயற்கை காட்சிகளையும் ரசிக்க முடியும். நீலகிரி மலையின் அழகை இந்த ரயிலைவிட சிறப்பாக காட்டும் விஷயம் எதுவுமே இல்லை.. இந்த ரயிலில் மட்டும் தான் பின்னாடி என்ஜின் இருக்கும். முன்னாடி என்ஜின் எதுவும் இருக்காது, இது ரயிலின் சிறப்பு அம்சம் ஆகும்.

இந்த ரயிலில் பார்த்தால் இன்னொரு சிறப்பு அம்சமும் உண்டு. எது என்னவென்றால், பொதுவாக ரயில்களில் இரண்டு தண்டவாளம் இருக்கும். ஆனால் ஊட்டி மலை ரயிலில் 3 தண்டவாளம் இருக்கும். அதாவது நடுவில் பல்லு சக்கரம் போன்ற அமைப்பு தண்டவாளம் முழுவதும் இருக்கும். ஏனெனில் ரயில் மேலே ஏறும் போது தவறிக்கூட கீழே வந்துவிடக்கூடாது என்பதற்காக இப்படி அமைத்திருப்பார்கள்.. அதாவது மலையேற்றத்திற்காக இப்படி அமைத்திருப்பார்கள்.

அதேநேரம் ஒவ்வொரு ரயில் நிலையத்திலும் கழிவறைகள் இருக்கும்,. அங்கு தான் கழிவறைக்கு போக முடியும். ரயில்கள் ஒவ்வொரு ரயில் நிலையத்திலும் 10 முதல் 15 நிமிடம் நின்றுதான் போகும். சுற்றுலாவிற்கு என்றே மாற்றப்பட்ட ரயில் என்பதால் வழக்கமான ரயில்போல் இது இருக்காது. போகும் இடம் எல்லாமே அற்புதமாக இருக்கும். மலைகள், அருவிகள், காடுகள், ஓடைகள் என பார்க்கும் அத்தனையும் உங்களுக்கு பிடிக்கும் . போகும் போதும் சரி, நிற்கும் இடங்களிலும் சரி இறங்கி ரசித்தபடி செல்ல முடியும்.

ஊட்டி ரயிலில் டிக்கெட் புக்கிங் எப்படி: இந்த ரயிலில் டிக்கெட் கட்டணம் ஒருவருக்கு 300 ரூபாய் ஆகும். ஆன்லைனில் தான் புக்கிங் செய்ய முடியும். குறைந்தது 3 மாதங்களுக்கு முன்பே புக்கிங் செய்தால் தான் ஐஆர்சிடிசி தளத்தில் டிக்கெட் கிடைக்கும். அதேபோல் வார இறுதி நாட்களில் புக்கிங் செய்வதும் சவாலாக இருக்கும்

அதேநேரம் முன்பதிவு இல்லாமல் ஆப்லைனில் அதாவது நேராக மேட்டுப்பாளையம் வந்தும் டிக்கெட் எடுத்து போகலாம், ஆனால் சில சீட்களே இருக்கும், இதில் மற்ற ரயில்களை போல் கூட்டமாக ஏற அனுமதிக்க மாட்டார்கள். ஒரு பயணி கூட கூடுதலாக ஏற முடியாது. ரயிலில் சீட்டு அளவில் தான் ஏற முடியும். எனவே உங்களுக்கு முன்பு ரயில் நிலையத்தில் டிக்கெட் கேட்டு காத்திருந்தவர்களுக்கு கிடைத்துவிட்டால், உங்களுக்கு கிடைக்காமல் போகலாம். எனவே புக்கிங் செய்து போய் பாருங்கள். அதேநேரம் ஐஆர்சிடிசி தளத்தில் மேட்டுப்பாளையம் டூ ஊட்டி என்று போட்டால் வராது, மேட்டுப்பாளையம் டு உதகமண்டலம் என்று போட்டால் தான் டிக்கெட் தோன்றும்

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments