பணிபுரியும் பெண்களுக்கு உதவும் வகையில் குழந்தைகள் பராமரிப்பு மையங்களை அமைக்கும் திட்டத்திற்கு அரசு முடிவெடுத்துள்ளது.

பராமரிப்பு மையங்கள்:
சத்தீஸ்கர் மாநிலத்தில் பணிக்கு செல்லும் பெண்களின் குழந்தைகளை பராமரிக்கும் நோக்கத்தில் 1500 குழந்தை காப்பகங்களை நிறுவுவதற்கு அரசு திட்டமிட்டுள்ளது.
இந்த காப்பகங்களில் ஆறு மாதம் முதல் ஆறு வயது வரையிலான குழந்தைகள் பராமரிக்கப்படுவார்கள்.
இந்திய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகத்தின் மூலம் 1500 குழந்தைகள் காப்பங்களுக்கான திட்டம் ஒதுக்கப்பட்டுள்ளதால் தேவை அதிகம் உள்ள இடங்களில் மையங்கள் நடத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மார்ச் 2024 முதல் திட்டம் செயல்படுத்தப்படும். பணிக்கு செல்லும் பெண்கள் எதிர் கொள்ளும் சவால்களை தீர்ப்பது திட்டத்தின் முக்கிய நோக்கம் ஆகும்.
அங்கன்வாடி மையங்கள் பிற்பகல் 3:30 மணி வரை மட்டுமே செயல்படுத்தப்படும். ஆனால் இந்த குழந்தைகள் காப்பகங்கள் மாலை 5:30 மணி வரையிலும், தேவை இருப்பின் அதற்குப் பிறகும் திறந்து வைக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த குழந்தைகள் காப்பகங்கள் ஒவ்வொன்றும் ஒரு வழிகாட்டி அங்கன்வாடி மையத்தால் கண்காணிக்கப்படும். தனியார் மற்றும் அரசு துறைகளில் பணிபுரியும் III மற்றும் IV ம் பணி நிலைகளில் உள்ள பெண் ஊழியர்கள் இத் திட்டத்தின் மூலம் பலன் அடைய முடியும்.
ஆறு மாதம் முதல் ஆறு வயது வரையிலான குழந்தைகளை பராமரிக்க காப்பக வீடுகள் அமைக்கப்பட்டு இதற்கான குழந்தைகளை கணக்கெடுக்கும் பணிகள் தொடங்க அரசு தரப்பில் இருந்து உத்தரவிடப்பட்டுள்ளது.