ஆசிய பாரா விளையாட்டில் சாதனை படைத்த தமிழர்கள்

மாற்றுத்திறனாளிகளுக்கான ஆசிய பாரா விளையாட்டு போட்டிகள் சீனாவில் ஹாங்சே நகரில் நடைபெற்று வருகிறது.

சிய பாரா விளையாட்டு போட்டியில் இதுவரை 111 பதக்கங்களை பெற்று இந்தியா சாதனை படைத்துள்ளது.  சமீபத்தில் 19வது ஆசிய விளையாட்டுப் போட்டி சீனாவின் ஹாங்சோவ் நகரில் நடைபெற்றது. இதில், இந்தியா உட்பட 45 நாடுகளை சேர்ந்த 12,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றறனர். ஆசிய விளையாட்டு தொடரில் அக்.8ம் தேதி இந்தியா பங்கேற்கும் போட்டிகள் நிறைவு பெற்றன.

இந்த முறை 19வது ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஒவ்வொரு நாளும் இந்தியா வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பதக்கங்களை குவித்தனர். சர்வதேச அளவில் ஒலிம்பிக் போட்டிக்கு அடுத்தபடியாக மிகப்பெரிய விளையாட்டாக ஆசிய விளையாட்டுப் போட்டி கொண்டாடப்படுகிறது. அதன்படி, சீனாவின் ஹாங்சோவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா சிறப்பாக செயல்பட்டு, இதுவரை இல்லாத அளவிற்கு பதக்கங்களை குவித்து இந்தியா வரலாற்று சாதனை படைத்தது.

அந்தவகையில், ஆசிய விளையாட்டுப் போட்டியில் 28 தங்கம், 38 வெள்ளி, 41 வெண்கலம் என மொத்தம் 107 பதக்கங்களுடன் இந்தியா 4வது இடத்தை பிடித்தது. இதற்கு பிரதமர் உட்பட பலரும் வாழ்த்துக்களை தெரிவித்தனர். ஆசிய விளையாட்டு போட்டிகளை தொடர்ந்து, தற்போது 2023 மாற்றுத்திறனாளிகளுக்கான ஆசிய பாரா விளையாட்டு போட்டிகள் சீனாவில் ஹாங்சே நகரில் நடைபெற்று வருகிறது.

ஆசிய பாரா விளையாட்டு போட்டிகளில் இந்தியா சார்பில் 196 வீரர்கள், 113 வீராங்கனைகள் என மொத்தமாக 309 பேர் பங்கேற்றுள்ளனர். ஆசிய பாரா விளையாட்டிலும் இதுவரை இல்லாத அளவிற்கு இந்திய வீரர் மற்றும் வீராங்கனைகள் பதக்கங்களை குவித்து வருகின்றனர். இந்த நிலையில், ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் தற்போது நம் வீரர்கள் சாதனைகளை குவித்து வருகிறார்கள்

அதன் வண்ணம் முதன் முறையாக 29 தங்கம் 31 வெள்ளி, 51 வெண்கலம் என மொத்தம் 111 பதக்கங்களை வென்று பதக்க பட்டியலில் ஐந்தாம் இடத்தை பிடித்து அசத்தியிருக்கிறது நம் இந்தியா. இந்தியாவிலிருந்து 196 ஆடவர் 113 மகளிர் என 309 பேர் பங்கேற்ற நிலையில் நூற்றுக்கும் மேற்பட்ட பதக்கங்களை அள்ளி குவித்துள்ளார்கள் இதில்

தடகளத்தில் மட்டும் – 18 தங்கம், 17 வெள்ளி, 20 வெண்கலம் என 55 பதக்கங்களையும்
பாட்மிண்டனில் 21 பதக்கங்களையும் இந்தியா அள்ளியிருக்கிறது. இந்த இரண்டு பிரிவுகளிலும் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகளும் சாதித்து காட்டியிருக்கிறார்கள்.
உயரம் தாண்டுதல் — மாரியப்பன் தங்வேல் (வெள்ளி) சைலேஷ் குமார் (தங்கம்)
வட்டெறிதல் – முத்துராஜா (வெண்கலம்)
பாட்மிண்டன் – துளசிமதி முருகேசன் – தங்கம்,வெள்ளி,வெண்கலம்

கடந்த 2018ல் ஆசிய பாரா விளையாட்டில் 72 பதக்கங்கள் பெற்றதே அதிகபட்சமாக இருந்த நிலையில், தற்போது 73 பதக்கங்கள் பெற்று இந்தியா வரலாற்று சாதனை படைத்துள்ளது. ஆசிய பாரா விளையாட்டியில் 73 பதக்கங்களை இந்தியா பெற்று சாதனை படைத்த நிலையில்,

இந்தவருடம் 2023 ஆம் ஆண்டு 111 பதக்கங்களை பெற்று சாதனை படைத்துள்ளது.

பிரதமர் மோடி பெருமிதம் கொண்டுள்ளார். வரலாற்றில் தங்களது பெயர்களை பொறித்த விளையாட்டு வீரர்களுக்கு வாழ்த்துக்கள் என்றும் விளையாட்டு வீரர்களின் அர்ப்பணிப்பு, திறமையால் வரலாற்று சாதனை சாத்தியமாகியுள்ளது எனவும் பிரதமர் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Click Here to Join:

WhatsApp Channal Link

Telegram Group link 

YouTube link

Instagram link 

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments