மகளிருக்கான 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் இந்திய வீராங்கனை வித்யா ராமராஜ் 55.68 வினாடிகளில் பந்தய தூரத்தை கடந்து வெண்கல பதக்கத்தை கைப்பற்றினார்.இவர் ஏற்கனவே தகுதி சுற்றில் உஷாவின் தேசிய சாதனையை முறியடித்து இருந்தார்.
ஸ்குவாஷ் விளையாட்டில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் சௌரவ் கோசல் ஜப்பான் வீரரை 11க்கு 5, 12க்கு 3 என்ற செட் கணக்கில் வீழ்த்தி அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார்.இதன் மூலம் ஆசிய போட்டி வரலாற்றில் இவர் வெல்லும் ஒன்பதாவது பதக்கமாகும். இதேபோன்று கலப்பு இரட்டையர் பிரிவில் அன்ஹத் சிங் அபை சிங் ஜோடி கொரியாவை வீழ்த்தி அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்று பதக்கத்தை உறுதி செய்திருக்கிறது.
இதேபோன்று கலப்பு இரட்டையர் பிரிவில் இந்திய ஜோடி தீபிகா பல்லிக்கல் மற்றும் ஹரிந்தர் பால் சிங் பிலிப்பைன்ஸ் ஜோடியை வீழ்த்தி அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றிருக்கிறது.இதன் மூலம் தீபிகா பல்லிக்கல் ஆசிய போட்டிகளில் ஏழாவது பதக்கம் உறுதியாக இருக்கிறது.
கபடி போட்டியில் மகளிர் பிரிவில் இந்திய அணி தென்கொரியாவை 56 க்கு 23 என்ற கணக்கில் வீழ்த்தி இருக்கிறது. இதேபோன்று ஆடவர் பிரிவில் வங்கதேசத்தை முதல் ஆட்டத்தில் எதிர்கொண்ட இந்திய அணி 55 க்கு 18 என்ற கணக்கில் வீழ்த்தி இருக்கிறது.
குத்துச்சண்டை போட்டியில் மகளிருக்கான 75 கிலோ எடை பிரிவில் இந்திய வீராங்கனை லவ்லினா இறுதிச்சுற்றுக்கு முன்னேறி பதக்கத்தை உறுதி செய்ததுடன் ஒலிம்பிக் கோட்டாவையும் கைப்பற்றி உள்ளார்.இந்திய வீராங்கனை பர்வீன் ஹூடா, இறுதிச்சுற்றுக்கு முன்னேறி பதக்கத்தை உறுதி செய்து இருக்கிறார்.
மகளிருக்கான 50 கிலோ எடை பிரிவில் இந்திய வீராங்கனை நிகாத் ஷரீன் வெண்கல பதக்கத்தை கைப்பற்றி இருக்கிறார். இதேபோன்று பிரீத்தி பவார் 54 கிலோ எடை பிரிவில் வெண்கல பதக்கத்தை கைப்பற்றினார். இதுபோன்று வில்வித்தையில் ஆடவர் ஒற்றைப் பிரிவில் இந்திய வீரர் ஓஜாஸ் மற்றும் அபிஷேக் ஆகியோர் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றதன் மூலம் தங்கம் மற்றும் வெள்ளி பதக்கத்தை உறுதி செய்து இருக்கிறார்கள்
மகளிருக்கான காம்பவுண்ட் வில்வித்தை போட்டியில் இந்திய வீராங்கனை ஜோதி இறுதிப் போட்டிக்கு முன்னேறி பதக்கத்தை உறுதி செய்து இருக்கிறார்.
இதேபோன்று ஆர்பரிக்கும் தண்ணீரில் படகு ஓட்டும் போட்டியில் ஆயிரம் மீட்டர் பிரிவில் இந்திய ஜோடி வெண்கல பதக்கத்தை கைப்பற்றி இருக்கிறது. இந்த பிரிவில் 1994 ஆம் ஆண்டுக்கு பிறகு இந்திய அணி பதக்கத்தை வென்றிருப்பது குறிப்பிடத்தக்கது
பேட்மிண்டனில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த், பிரனாய் மற்றும் மகளிர் ஒற்றையர் பிரிவில் பிவி சிந்து ஆகியோர் தங்களுடைய முதல் போட்டியில் வெற்றி பெற்றிருக்கிறார்கள்
தற்போது வரை இந்திய அணி 13 தங்கம் 24 வெள்ளி 26 வெண்கலம் என 63 பதக்கங்களுடன் நான்காவது பட்டியலில் இருக்கிறது. 285 பதக்கங்களுடன் சீனா முதலிடத்திலும், 127 பதக்கங்களுடன் ஜப்பான் இரண்டாவது இடத்திலும் 137 பதக்கங்களுடன் தென்கொரியா மூன்றாவது இடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது