இந்தியாவில் ஆதார் அட்டை என்பது மிக முக்கியமான ஆவணங்களில் ஒன்றாக மாறியுள்ளது. இந்தியாவில் அரசுக்குச் சொந்தமான மற்றும் தனியார் நிறுவனங்கள் வழங்கும் பல சேவைகளைப் பெற இந்த ஆவணம் இப்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் இது முக்கியமானது.
இந்த முக்கியமான அடையாள அட்டையில் மக்களின் முகம் தெளிவாக இருப்பதில்லை. ஒவ்வொருவரும் வினோதமான தோற்றத்தில் தான் காணப்படுகிறார்கள். நாட்டின் முக்கியமான ஆதார் அடையாள அட்டையில் (Aadhaar card), அந்தந்த தனிநபரின் முக அடையாளமே தெளிவாக இல்லாமல் இருப்பதும், ஆதார் அட்டையில் உள்ள முகத்தைப் பார்த்து நண்பர்கள் கிண்டல் செய்யும் விதத்திலேயே ஆதார் அட்டை புகைப்படங்கள் (Aadhaar Card Photo) அமைந்துள்ளது.
ஆதார் ஆணையமே ஆரம்பத்தில் (UIDAI) சரியாகச் செய்திருக்க வேண்டும். ஆனால், போதிய நேரமும், சரியான புகைப்படக் கருவிகளும் வழங்கப்படாத காரணத்தினால் தெளிவான புகைப்படங்களை ஆதாரில் அவர்களால் பதிவிட முடியாமல் போனது என்று பதிலளிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் முக்கியமான அடையாள அட்டையிலேயே அடையாளம் தெரியாத புகைப்படத்தை வைத்திருந்தால் அது சரி இல்லை என்பதே எல்லோருடைய பதிலாக இருக்கிறது. நீண்ட நாள் குறையாகக் கூறப்பட்டு வந்த ஆதார் புகைப்படங்கள் பற்றி எதிர்மறை கருத்துக்கள் பதிவாகி வருகின்றன. இதன் விளைவாக, ஆதார் ஆணையம் இப்போது இந்தியர்களை, அவர்களின் ஆதார் அட்டையில் உள்ள புகைப்படங்களை மாற்றிக்கொள்ள (Aadhaar photo update) அனுமதிக்கிறது.
உங்கள் ஆதார் அட்டையில் உள்ள பழைய புகைப்படத்தை எளிய முறையில் மாற்றுக்கொள்ள இப்போது அனுமதிக்கப்படுகிறது. இதை ஆன்லைன் (Aadhaar update online) மூலமாக விண்ணப்பித்து, புகைப்பட மாற்றத்திற்கான கட்டணத்தை செலுத்தினால் போதும், உங்கள் ஆதார் ஆவணத்தில் உள்ள புகைப்படம் மாற்றம் செய்யப்படும். சரி, உங்கள் ஆதார் அட்டையில் உள்ள புகைப்படத்தை எப்படி மாற்றுவது என்ற செயல்முறையை இப்போது பார்க்கலாம்.
– முதலில் UIDAI இன் https://uidai.gov.in/my-aadhaar/get-aadhaar.html அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்வையிடவும்.
– போர்ட்டலில் இருந்து ஆதார் பதிவு படிவத்தைப் பதிவிறக்கவும்.
– படிவத்தில் தேவையான விவரங்களை உள்ளிடவும்.
– நீங்கள் முழு படிவத்தையும் நிரப்ப வேண்டியதில்லை.
– புகைப்படத்தை மாற்றுவதற்குத் தேவையான பொருத்தமான பிரிவுகளை மட்டும் நிரப்பவும்.
– அருகிலுள்ள ஆதார் பதிவு மையத்தில் படிவத்தைச் சமர்ப்பிக்கவும்.
– ஆதார் நிர்வாகி உங்கள் விவரங்களை பயோமெட்ரிக் சரிபார்ப்பு மூலம் உறுதி செய்வார்.
– ஆதார் பதிவு மையம் / ஆதார் சேவா கேந்திராவில் நிர்வாகி உங்களின் புதிய புகைப்படத்தை எடுப்பார்.
– புகைப்படத்தை மாற்றும் சேவைக்கு நீங்கள் ரூ. 100 + GST செலுத்த வேண்டும்.
– புதுப்பிப்பு கோரிக்கை எண்ணுடன் (URN) ஒப்புகை சீட்டையும் பெறுவீர்கள்.
– UIDAI இன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் நிலையைச் சரிபார்க்க URN ஐப் பயன்படுத்தவும்.
இந்த மாற்றம் சரியாக நடைபெற அதிகபட்சம் 90 நாட்கள் எடுத்துக்கொள்ளப்படும் என்பது கவனிக்கத்தக்கது. உங்களின் சொந்த வீட்டில் இருந்தபடியே, UIDAI அதிகாரப்பூர்வ இணையதளத்திலிருந்து புதிய புகைப்படத்துடன் கூடிய ஆதார் அட்டையை நீங்கள் பதிவிறக்கம் செய்து பயன்படுத்த துவங்கலாம். அல்லது ஆதார் தளத்தில் விண்ணப்பித்து புதிய ஆதார் PVC அட்டையை (Aadhaar PVC Card) கட்டணம் செலுத்தி வாங்கிக்கொள்ளலாம்.
Click Here to Join: