ஆதார் அட்டையில் பிறந்த தேதியை மாற்ற எந்தெந்த ஆவணங்கள் தேவை என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
இந்திய குடிமகன்களுக்கான அடையாள அட்டையாகவும், அரசின் திட்டங்களில் பயன்பெறுவதற்கு தேவைப்படும் அடிப்படையான ஆவணமாகவும் இருக்கும் ஆதார் அட்டையை இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIAI) வழங்கி வருகிறது. தகுந்த ஆவணத்தை ஆதாரமாகக் கொண்டு இந்த ஆதார் அட்டையில் உள்ள பெயர், பிறந்த தேதி, முகவரி போன்றவற்றை மாற்றிக் கொள்வதற்கு இந்த அமைப்பு அனுமதிக்கிறது. எனினும் மொபைல் நம்பர், பாலினம், புகைப்படம் மற்றும் இதர பயோமெட்ரிக் விவரங்களை திருத்த எந்தவித ஆவணங்களும் தேவையில்லை.
ஆதார் அட்டையில் பிறந்த தேதியை மாற்றுவதற்கு நாம் சமர்ப்பிக்கும் ஆவணத்தில் நமது பெயர், பிறந்த தேதி, முகவரி போன்ற விவரங்கள் இடம் பெற்றிருக்க வேண்டும். அதன்படி என்னென்ன ஆவணங்களை சமர்ப்பிக்கலாம் என்று UIAI அமைப்பு பட்டியலிட்டுள்ளது.
1. பாஸ்போர்ட்
2. மத்திய, மாநில அரசுகளில் அல்லது பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றுபவர் என்பதற்கான அடையாளச் அட்டை அல்லது தன்னாட்சி பெற்ற அரசு அமைப்பால் வழங்கப்படும் அடையாள அட்டை.
3. ஓய்வூதியதாரர் அடையாள அட்டை அல்லது சுதந்திரப் போராட்ட வீரர் என்பதற்கான அடையாள அட்டை அல்லது மத்திய, மாநில அரசினால் வழங்கப்படும் ஓய்வூதிய உத்தரவு ஆணை.
4. அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்வி வாரியத்தால் வழங்கப்படும் மதிப்பெண் சான்று மற்றும் இதர சான்றிதழ்கள்.
5. திருநங்கைகள் சட்டத்தின் படி வழங்கப்பட்ட திருநங்கை என்பதற்கான அடையாள அட்டை.
6. பிறப்புரிமை சட்டத்தின்படி வழங்கப்பட்ட பிறப்புச் சான்று ஆவணம்.
7. விதிவிலக்காக சில சமயங்களில், பிறப்புரிமை சட்ட விதிமுறைகளின் படி வழங்கப்படுகின்ற சுய சான்று ஆவணம்.
இதில் சரியான ஆவணங்களை வைத்து உங்கள் அருகில் உள்ள E – சேவை மையத்தில் நீங்கள் சமர்பிக்கலாம் ஆதாருடன் இணைக்கப்பட்ட உங்கள் தொலைபேசி எண்ணிற்கு வரும் OTP யை பதிவு செய்து சரியான தகவல்களை குடுத்து சமர்பித்த பிறது அதிலிருந்து அதிகபட்சம் 15 நாட்களுக்குள் நீங்கள் உங்களது திருத்தப்பட்ட சரியான ஆதாரை பெற்றுக்கொள்ளலாம்.
இது தவிர ஆதார் அட்டை வழங்கப்பட்ட நாளிலிருந்து ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கும் ஒரு முறை தங்களது தரவுகளை பயனாளர்கள் அப்டேட் செய்ய வேண்டும் என்று UIAI அமைப்பு வலியுறுத்துகிறது. இவ்வாறு அப்டேட் செய்தால் தான் தரவுகள் சரியாக இருக்கும் என்று அந்த அமைப்பு தெரிவிக்கிறது. குடிமக்கள் தங்கள் தரவுகளை ஆதார் அட்டையில் இலவசமாக அப்டேட் செய்ய தற்போது அனுமதிக்கப்படுகிறது.
Click Here to Join: