ஆதார் கார்டில் இனி மாற்றங்களை செய்வதற்கான கட்டணம் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதற்கான இலவச சேவை நிறுத்தப்பட உள்ளது.
கடந்த 10 ஆண்டுகளில் உங்கள் ஆதார் விவரங்களை நீங்கள் புதுப்பிக்கவில்லை என்றால் இந்த மாதம் தான் அதற்கான கடைசி வாய்ப்பு . டிசம்பர் 14 வரை இலவசமாகச் செய்யலாம் என்று இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் (UIDAI) இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆதார் தொடர்பான மோசடிகளைத் தடுக்க, 10 வருடங்களாக ஆதார் வைத்திருப்பவர்களை, சமீபத்திய தகவலுடன் விவரங்களைப் புதுப்பிக்குமாறு UIDAI வலியுறுத்தி உள்ளது.
ஆதார் முக்கியம்: ஆதார் கார்டு தற்போது நாட்டில் முக்கியமான அடையாள அட்டையாக மாறிவிட்டது. பல சேவைகளுக்கு இந்தியாவில் ஆதார் கார்டு முக்கியம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. பல துறைகளில் ஆதார் கார்டுகளை இணைக்க வேண்டியதும் அவசியம் ஆகிவிட்டது.
மத்திய அரசு சேவைகள், மாநில அரசு சேவைகளை பெற ஆதார் கார்டு முக்கியம் ஆகி உள்ளது. இந்த நிலையில்தான் ஆதார் அட்டையில் மாற்றங்களை செய்ய மத்திய அரசு இலவச ஆன்லைன் வசதியை ஏற்படுத்திக்கொடுத்துள்ளது. 10 ஆண்டுகளாக ஆதார் கார்டை அப்டேட் செய்யாதவர்கள், விலாசம் மாறியவர்கள், ஆதார் கார்டில் தவறான விவரங்கள் உள்ளவர்கள் ஆன்லைன் மூலம் அப்டேட் செய்ய முடியும்.
ஆதார் மாற்றம்: உதாரணமாக உங்களின் பெயர் தவறாக இருந்தால் அல்லது வேறு விவரங்கள் தவறாக இருந்தால் ஆன்லைன் மூலம் அதை எளிதாக மாற்ற முடியும். இதற்கான வசதிகளை ஆதார் அமைப்பு ஏற்படுத்தி கொடுத்து உள்ளது.
UIDAI ஏற்படுத்தி கொடுத்துள்ள வசதிகள் மூலம் எளிதாக இந்த விவரங்களை மாற்ற முடியும். நவம்பர் 14ம் தேதி வரை இந்த மாற்றங்களை செய்ய கட்டணம் இல்லை. ஆன்லைன் மூலம் எளிதாக செய்ய முடியும். நேரில் ஆதார் மையத்தில் செய்வதற்கு மட்டும் 50 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும்.
கட்டணம் இல்லை: myAadhaar பக்கம் மூலம் எளிதாக இவர்கள் விலாசத்தை மாற்றும் வசதி இருந்தது. ஆனால் தற்போது அந்த அவகாசம் நிறைவிற்கு வர உள்ளது. நேற்றோடு இந்த அவகாசம் முடிந்த நிலையில் இனி விலாசத்தை மாற்ற கட்டணம் செலுத்த வேண்டும்.
இச்சேவையை நேரிடையாக பெற இப்போதும் கட்டணம் உள்ளது. ஆனால் இதுவரை ஆன்லைன் வழியாக இலவசமாக பெற முடிந்தது. ஆனால், இச்சேவை இனி இலவசம் கிடையாது. இனி கட்டணம் விதிக்கப்பட உள்ளது. இதை பெற இன்னும் 4 நாட்கள் மட்டுமே உள்ளது.
uidai.gov.in அல்லது https://myaadhaar.uidai.gov.in/genricPVC மூலம் ஆதார் எண் அல்லது விர்ச்சுவல் ஐடி அல்லது என்ரோல்மென்ட் ஐடி மூலம் இந்த அட்டையின் விலாசத்தை புதுப்பிக்க முடியும். இதற்கு கட்டணம் இப்போது இல்லை.. மை ஆதார் என்ற செயலியில் உங்கள் ஆதார் எண்ணை வைத்து லாகின் செய்து, அதிலேயே பணம் செலுத்தாமல் விவரங்களை மாற்ற முடியும் இனி ரூ. 50 செலுத்தி மேற்கண்ட பக்கத்தில் ஆன்லைனில் மாற்றம் செய்யலாம் என்று கூறப்படுகிறது. ஆனாலும் இன்னும் உண்மையான கட்டணம் எவ்வளவு என்பது அரசு தரப்பால் உறுதி செய்யப்படவில்லை
Click Here to Join: