![Tamizha IAS Academy](https://tamizhaacademy.in/wp-content/uploads/2023/10/image-19.png)
தாட்கோ வழங்கக்கூடிய மானியம் வாயிலாக சிமெண்ட் விற்பனை முகவர்கள் ஆவின் பாலகம் அமைக்க விண்ணப்பிக்கலாம் என திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார்.
மானியத்தொகை:
தமிழக ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் பொருளாதார நலனை கருத்தில் கொண்டு அவர்களுக்கு உதவும் வகையில் பல்வேறு நல திட்டங்களையும் மானியத்துடன் வங்கி கடன் வசதிகளையும் வழங்கி வருகிறது. அந்த வகையில் தற்போது சிமெண்ட் விற்பனை முகவர்கள் தாட்கோ வழங்க கூடிய மானியத்தின் வாயிலாக ஆவின் பாலகம் அமைக்க விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தற்போது 100 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின தொழில் முனைவோருக்கு தமிழ்நாடு சிமெண்ட் கழகம் அதிகபட்சமாக ரூ. 21/4 லட்சம் வரை மானியம் வழங்கி வருகிறது. அதே போல 50 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு ஆவின் பாலகம் அமைக்க திட்ட தொகையில் 50 சதவீதம் அல்லது 21/4 லட்சம் வரை மானியம் வழங்கி வருகிறது. இதன் கீழ் பயன்பெற விரும்புபவர்கள் www.tadhco.com என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பங்களை பெற்று மாவட்ட மேலாளர் அலுவலகத்தை அணுகி விண்ணப்பிக்கலாம்.