பல ஆண்டுகளாக, ‘இந்தியன் ஆஃப் தி இயர்’ விருது பெற்றவர்களில் பிரதமர் நரேந்திர மோடி, ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ரா, கிரிக்கெட் நட்சத்திரம் விராட் கோலி உள்ளிட்டோர் அடங்குவர்.
சி.என்.என் – நியூஸ்18 தொலைக்காட்சி ‘இந்தியன் ஆஃப் தி இயர்’ விருது விழாவில் சமூக மாற்றத்துக்கான பிரிவில் சென்னையைச் சேர்ந்த மருத்துவர் ரவி கண்ணனுக்கு விருது வழங்கி கெளரவிக்கப்பட்டது.
இந்திய செய்தித் தொலைக்காட்சிகளில் தனக்கென தனித்த இடம் பிடித்துள்ள சி.என்.என் – நியூஸ்18 தொலைக்காட்சி, கடந்த 2006ஆம் ஆண்டு முதல் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குவோரை பெருமைப்படுத்தி விருதளித்து கவுரவித்து வருகிறது.
அந்த வகையில், 13ஆவது ‘இந்தியன் ஆஃப் தி இயர்’ விருது வழங்கும் விழா டெல்லியில் இன்று மாலை 6 மணிக்கு கோலாகலமாக தொடங்கியது.
ஆரம்பமே அதிரடியாகவும் பார்வையாளர்களின் மனங்கவரும் வகையிலும் இசை நிகழ்ச்சியுடன் தொடங்கியது. விழாவில் நடிகர்கள் ஷாரூக்கான் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்துகொண்டனர்.
இந்த விருது வழங்கும் விழாவில் சி.என்.என் – நியூஸ்18 தொலைக்காட்சியின் ‘இந்தியன் ஆஃப் தி இயர் சிறந்த பொழுதுபோக்கு நட்சத்திரம்’ விருதை தமிழகத்தை சேர்ந்த பிரபல முன்னணி இயக்குனர் மணிரத்தினம் பெற்றார்.
மேலும், ‘இந்தியன் ஆஃப் தி இயர் யூத் ஐகான்’ விருதை முன்னணி இசையமைப்பாளர் அனிருத் பெற்றார்.
அதேபோல், நடிகர் ஷாருக்கானுக்கு ‘இந்தியன் ஆஃப் தி இயர் 2023’ விருது வழங்கப்பட்டது. ஜூரியின் விருதை ஏற்று, விருது வழங்கும் நிகழ்ச்சியில் நடிகர் ஷாருக்கான் கலந்து கொண்டார்.
பல ஆண்டுகளாக, ‘இந்தியன் ஆஃப் தி இயர்’ விருது பெற்றவர்களில் பிரதமர் நரேந்திர மோடி, ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ரா,
கிரிக்கெட் நட்சத்திரம் விராட் கோலி, இந்திய மகளிர் கிரிக்கெட் அணி, என்ஜிஓ ஸ்டாப் ஆசிட் அட்டாக்ஸ், செஸ் கிராண்ட்மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த், இசை ஜாம்பவான் ஏ.ஆர்.ரஹ்மான்,
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ), நோபல் பரிசு பெற்ற கைலாஷ் சத்யார்த்தி, நட்சத்திர குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம், நடிகை தீபிகா படுகோன், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் அடங்குவர்.