தமிழ்நாட்டில் நடக்க உள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் தூத்துக்குடி தொடர்பான சர்ப்ரைஸ் அறிவிப்பு ஒன்று வெளியாக இருக்கிறதாம்.
தமிழ்நாட்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் நிகழ்வான தமிழ்நாடு உலகளாவிய முதலீட்டாளர்கள் மாநாடு (TNGIM – டிஎன்ஜிஐஎம் ) 2024 ஜனவரி 7 மற்றும் 8 ஆம் தேதிகளில் சென்னையில் நடைபெறவுள்ளது. டிஎன்ஜிஐஎம் 2024 முதலீட்டாளர்கள், உலக நாட்டு வல்லுனர்கள், நிர்வாக தலைகள் மற்றும் கல்வியாளர்களை ஒன்றிணைக்கும் நிகழ்வு ஆகும்.
நிலையான மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஏற்படுத்தும் வகையிலும், டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை நோக்கியும் தமிழ்நாட்டை கொண்டு செல்லும் வகையில் இந்த தமிழ்நாடு உலகளாவிய முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்பட உள்ளது. தமிழ்நாட்டிற்கு முதலீடுகள் கொண்டு வரவும், புதிய தொழில்நுட்பங்களை கொண்டு வரவும் கொண்டு வரவும் இந்த மாநாடு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
வெளிநாடு பயணம்:
தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் சமீபத்தில் வெளிநாடு பயணம் மேற்கொண்டார். சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு முதல்வர் பயணம் மேற்கொண்டார். ஜனவரி 2024-இல் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு அழைப்பு விடுக்க பயணம் மேற்கொண்டார். தமிழ்நாட்டிற்கு முதலீடுகள் கொண்டு வரவும், புதிய தொழில்நுட்பங்களை கொண்டு வரவும் கொண்டு வரவும் இந்த பயணம் முக்கியமானதாக பார்க்கப்பட்டது.
மாநாடு விரைவில்:
தமிழ்நாட்டிற்கு முதலீடுகள் கொண்டு வரவும், புதிய தொழில்நுட்பங்களை கொண்டு வரவும் கொண்டு வரவும் இந்த பயணம் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. தமிழ்நாட்டில் 2024ம் ஆண்டு ஜன. 7 மற்றும் 8ம் தேதிகளில் முதலீட்டாளர்கள் மாநாடு நடக்க உள்ளது. சிங்கப்பூர், ஜப்பான் ஆகிய நாடுகளில் ஸ்டாலின் முக்கிய சந்திப்புகளை நடத்தினார். அங்கே அரசியல் தலைவர்கள், பல்வேறு நிறுவன சிஇஓக்கள், அங்கே வசிக்கும் தமிழர்களை சந்தித்து முதல்வர் ஸ்டாலின் ஆலோசனைகளை மேற்கொண்டார்.
தமிழ்நாட்டில் நடக்க உள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் தூத்துக்குடி தொடர்பான சர்ப்ரைஸ் அறிவிப்பு ஒன்று வெளியாக இருக்கிறதாம்.
அமைச்சர் டிஆர்பி:
இது தொடர்பாக அமைச்சர் டிஆர்பி ராஜா தி இந்து ஊடகத்திற்கு பேட்டி அளித்துள்ளார். அதில், இந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில் சில முதலீடுகள் தென் தமிழ்நாட்டிற்கு செல்லும். ஆயிரக்கணக்கான உயர்தர வேலைகளைஇது உருவாக்கும். ஒரு உற்பத்தி மையமாக தூத்துக்குடியை மாற்ற போகும் ஒரு சிறப்பு அறிவிப்பு உள்ளது. இது மிகவும் மதிப்புமிக்க சர்வதேச நிறுவனம் ஒன்று தூத்துக்குடிக்கு வர உள்ளது.. இந்நிறுவனம் இந்தியா வருவது இதுவே முதல்முறை, அவர்கள் தமிழகத்தை தேர்வு செய்துள்ளனர். முதலீட்டாளர்கள் மற்றும் மக்கள் இருவரும் சமூக உள்கட்டமைப்புக்கு நெருக்கமாக இருக்க விரும்புகிறார்கள். விளையாட்டு வசதிகள் உட்பட துடிப்பான இடங்களை இளைஞர்கள் விரும்புகிறார்கள். அதற்கான வேலைகளை செய்து வருகிறோம்.
நமது விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அனைத்து தொகுதிகளிலும் விளையாட்டு கட்டமைப்புகளை அறிமுகப்படுத்தி மதிப்பு சேர்த்துள்ளார். நிறுவனங்கள் சென்னைக்கு வெளியே முதலீடு செய்கின்றன; உதாரணமாக, ஓசூர்-கிருஷ்ணகிரி பகுதியில் (மேற்கில்) மின்சார வாகன சுற்றுச்சூழல் அமைப்பு வளர்ந்து வருகிறது, மேலும் இங்கு வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படுகின்றன. டாடா எலக்ட்ரானிக்ஸ் பெரிய அளவில் வளர்ந்து வருகிறது. ஓலாவும் விரிவடைந்து வருகிறது. இந்த பெல்ட் எப்போதும் இல்லாத அளவிற்கு வேகமான வளர்ச்சியை சந்திக்க போகிறது, என்று அமைச்சர் டிஆர்பி ராஜா தெரிவித்துள்ளார்.