இந்தோனேசியாவில் சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிக்கவும், பொருளாதாரத்தில் பல மடங்கு முன்னேற்றம் கொண்டுவருவதற்காக, இந்தியா உட்பட 20 நாடுகளைச் சேர்ந்த பயணிகளுக்கு இலவச நுழைவு விசாக்களை வழங்க இந்தோனேசியாவின் சுற்றுலா மற்றும் பொருளாதார அமைச்சகம் முன்வந்துள்ளது.
தற்போதுள்ள விசா விலக்குகள் உள்ள நாடுகளைத் தவிர, அதிக எண்ணிக்கையிலான வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளைக் கொண்ட 20 நாடுகளை அமைச்சகம் முன்மொழிந்தது என்று சுற்றுலா மற்றும் பொருளாதாரத் துறை அமைச்சர் சாண்டியாகோ ஊனோ ஜகார்த்தாவில் தெரிவித்தார்.
20 நாடுகளுக்கு இலவச நுழைவு விசா வழங்குவது வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இது உள்நாட்டு நுகர்வு அதிகரிப்பு, முதலீட்டை ஈர்ப்பது மற்றும் டிஜிட்டல் பொருளாதாரத்தின் வளர்ச்சியை ஆதரிக்கும்.
நாங்கள் தரமான சுற்றுலாப் பயணிகளை குறிவைத்து வருகிறோம், குறிப்பாக நீண்ட காலம் தங்கியிருப்பவர்கள் மற்றும் உள்ளூர் பொருளாதாரத்தில் அதிக செலவு செய்பவர்களை இலக்காகக் கொண்டுள்ளோம் என்று அவர் தெரிவித்தார்.
20 நாடுகளில் ஆஸ்திரேலியா, சீனா, இந்தியா, தென் கொரியா, அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி ஆகியவை அடங்கும்.
இதேபோன்று, சுற்றுலாத் துறையை பெரிதும் நம்பியிருக்கும் அண்டை நாடான தாய்லாந்து, சீனா மற்றும் இந்தியர்களுக்கு விசா தேவைகளில் இருந்து விலக்கு அளிப்பது போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இந்தியா மற்றும் தைவானில் இருந்து வரும் பயணிகளுக்கான விசா தேவைகளை மே 2024 வரை தற்காலிகமாக நீக்குவதாக தாய்லாந்து அறிவித்துள்ளது.
ஜனவரி மற்றும் அக்டோபர் 29 வரை தாய்லாந்து 2 கோடியே 2 லட்சம் பேர் வருகை தந்துள்ளனர், இதன் விளைவாக 2,567 கோடி வருமானம் கிடைத்துள்ளது.
மக்கள் நீதிக் கட்சி மாநாட்டில் பிரதமர் அன்வார் இப்ராகிம் உரையின் போது முன்னர் அறிவித்தப்படி, சீனா மற்றும் இந்தியர்கள் டிசம்பர் 1 முதல் 30 நாட்களுக்கு மலேசியாவிற்கு விசா இல்லாமல் நுழைய அனுமதிக்கப்படுகிறார்கள். சீனாவும் இந்தியாவும் மலேசியாவின் நான்காவது மற்றும் ஐந்தாவது பெரிய சுற்றுலா சந்தைகளை பிரதிநிதித்துவம் செய்கின்றன.
இந்த ஆண்டின் ஜனவரி மற்றும் ஜூன் மாதங்களுக்கு இடையில், மலேசியா சுமார் 91 லட்சம் சுற்றுலாப் பயணிகளை வரவேற்றுள்ளதாக அரசு தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர்களில் 4,98,540 பேர் சீனாவைச் சேர்ந்தவர்கள், 2,83,885 பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள். இதே காலகட்டத்தில் 2019 இல் தொற்றுநோய் தொடங்குவதற்கு முன்பு, சீனாவிலிருந்து 15 லட்சம் சுற்றுலாப் பயணிகளும், இந்தியாவிலிருந்து 3,54,486 சுற்றுலாப் பயணிகளும் வருகை தந்துள்ளனர்.
இனி இந்தியர்கள் மலேசியாவுக்கு செல்ல விசா தேவையில்லை! மாஸ் அறிவிப்பு..