இந்திய அஞ்சல் துறையில் (தபால் துறை) அஞ்சல் உதவியாளர்கள், ஷார்டிங் அசிஸ்டண்ட், தபால்காரர், மெயில் கார்டு மற்றும் மல்டி டாஸ்கிங் பணியாளர் என 1899 காலிப்பணியிடங்களுக்கு தகுதியான விளையாட்டு வீரர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் https://dopsportsrecruitment.cept.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் முறையாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்களை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். https://dopsportsrecruitment.cept.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இந்திய அஞ்சல்துறையில் விளையாட்டு வீரர்களுக்கான ஆட்சேர்ப்பு குறித்து அறிவிக்கை இணைப்பு உள்ளது. இந்த லிங்கில் விண்ணப்பங்களை வரும் டிசம்பர் 09ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
இந்திய அஞ்சல் ஆட்சேர்ப்பு 2023: 1899 காலியிடங்களை நிரப்புவதற்காக அஞ்சல் உதவியாளர்கள், ஷார்டிங் அசிஸ்டண்ட்,, தபால்காரர், மெயில் கார்டு மற்றும் மல்டி-டாஸ்கிங் பணியாளர் போன்ற பதவிகளுக்கான இந்திய அஞ்சல் துறை ஆட்களை தேர்வு செய்ய முடிவு செய்துள்ளது.
கல்வி தகுதி: 10வது தேர்ச்சி/ 12வது தேர்ச்சி அல்லது இளங்கலைப் பட்டம் பெற்ற விளையாட்டு வீரர்கள் தங்கள் தகுதி மற்றும் விருப்பம் உள்ள பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்-
இந்தியா அஞ்சல்துறை ஆட்சேர்ப்பு 2023
காலிபணியிடங்கள்: 1899
பணி தரும் நிறுவனம்: இந்திய அஞ்சல், மத்திய அரசு
பணி விவரங்கள்: அஞ்சல் உதவியாளர்கள், ஷார்டிங் அசிஸ்டண்ட், தபால்காரர், மெயில் கார்டு மற்றும் மல்டி-டாஸ்கிங் பணியாளர்கள்
காலியிடங்கள் 1899
வேலை வகை : மத்திய அரசு வேலை
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்
விண்ணப்பிக்க கடைசி தேதி: நவம்பர் 10 முதல் டிசம்பர் 9, 2023 வரை விண்ணப்பிக்கலாம்
தகுதி : தகுதி வாய்ந்த விளையாட்டு வீரர்கள்
சம்பளம் ரூ. 18000 முதல் 25000 (ஆரம்ப சம்பளம்)
தேர்வு முறை: தகுதி அடிப்படையில் நடைபெறும்
வயது வரம்பு; குறைந்தபட்ச வயது வரம்பு 18 வயது நிறைவு பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய இணையதளம்: https://dopsportsrecruitment.cept.gov.in/
இந்திய அஞ்சல் துறை வெளியிட்ட 1899 காலியிடங்களில், 598 தபால் உதவியாளர் பணியிடங்களும், 143 ஷார்டிங் அசிஸ்டண்ட் பணியிடங்கள், 585 தபால்காரர் பணியிடங்களும், 3 மெயில் கார்டு பணியிடங்களும், 570 மல்டி டாஸ்கிங் பணியாளர் பணியிடங்களும் காலியாக உள்ளன. இந்த காலி பணியிடங்கள் பல்வேறு மாநிலங்களில காலியாக உள்ளன. தமிழகத்தை பொறுத்தவரை 110 தபால் உதவியாளர் பணியிடங்களும், 19 ஷார்டிங் அசிஸ்டண்ட் பணியிடங்கள், 108 போஸ்ட் மேன் பணியிடங்கள், 124 மல்டி டாஸ்க் பணியிடங்கள் காலியாக உள்ளன. மற்ற மாநிலங்களை ஒப்பிடும் போது தமிழகத்தில் தான் அதிக காலி பணியிடங்கள் உள்ளன.
நோ ‛கேஷ்’ டிசம்பரில் யுபிஐ மூலம் மட்டுமே பணப்பரிவர்த்தனை செய்யணும்.. பிரதமர் மோடி அழைப்பு..
Click Here to Join: