
இந்திய மாணவர்களுக்கு மலிவு விலையில் “க்ரோம்புக்“ மடிக்கணினி வழக்கப்படும் என் சுந்தர் பிச்சை தகவல்
HP நிறுவனத்துடன் இணைந்து Google Chromebook மடிக்கணினியை இந்தியாவில் தயாரிக்கபோவதாக அறிவித்த கூகுள் தலைமை செயல் அதிகாரி சுத்தர் பிச்சை, இந்திய மாணவர்களுக்கு மலிவு மற்றும் பாதுகாப்பு கணினி அனுபவம் மேலும் எளிதில் கிடைக்கும் என்றார்.
தமிழகத்தின் ஸ்ரீ பெரும்புதூரில் அமைந்துள்ள “ப்ளெக்ஸ் தொழிற்சாலை வளாகத்தில்“ கடந்த 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் HP நிறுவனத்தின் மடிக்கணினிகள், மேசைக் கணிப்பொறிகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.
Google ன் Dedicated operating system (OS) கொண்ட light weight Laptop ‘க்ரோம்புக்“ தயாரிப்பை இந்த தொழிற்சாலையில் மேற்கொள்ள HP நிறுவனத்துடன் Google ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது
இது தொடர்பாக Google தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை வெளியிட்ட எக்ஸ் வலைதளப் பதிவில், இந்தியாவில் Google Chromebook light weight Laptop யை தயாரிப்பதற்கு HP நிறுவனத்துடன் இணைந்துள்ளோம்.
இந்தியாவில் முதல் முறை யாக Google Chromebook தயாரிக்கப்படுகிறது. இதன் மூலம் இந்திய மாணவர்களுக்கு எளிய முறையில் Laptop கிடைக்கும் வாய்புள்ளது என குறிப்பிட்டிருந்தார் அவர் குறிப்பிட்டதிக்கினங்க Hp நிறுவன செய்தி தொடர்பாளரும் இந்த தகவலை உறுதி படுத்தினார்.
Google மற்றும் Hp யின் கூட்டு முயற்சியில் உலகம் முழுவதும் 5 கோடிக்கும் அதிகமான பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு உதவிபுரிந்து முன்னனி சாதனமாக Chromebook திகழ்கிறது.
தனி இயங்குதளம் கொண்ட மற்ற நிறுவனங்களின் light weight Laptop ஒப்பிடும் போது Google Chromebook குறைந்த விலையில் கிடைக்கிறது.
புதிய Google Chromebook ஒன்றினுடைய தற்போதைய விலை ரூ. 15.990 வரை கிடைக்கிறது இப்பொழுது இந்தியாவிலேயே Google Chromebook தயாரிக்கப்படும் நிலையில் அதன் விலை மேலும் குறைய அதிக வாய்ப்பு உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.