இனி LPG சிலிண்டரிலும் QR குறியீடு! – என்ன பலன் தெரியுமா?

எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்தும் வாடிக்கையாளரின் வீட்டிற்கு டெலிவரி செய்யப்படும் எல்பிஜி சிலிண்டரில் டேம்பர்-ப்ரூஃப் சீல் இருக்கும், அதில் QR குறியீடும் தெரியும் என பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் தெரிவித்துள்ளது.

QR குறியீடு:

BPCL, தனது வாடிக்கையாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டு புதிய வசதியைத் தொடங்கியுள்ளது. இதற்கு “Pure for Sure” என பெயரிடப்பட்டுள்ளது. நிறுவனத்தின் கருத்துப்படி, வாடிக்கையாளர் திருப்தியை அதிகரிப்பதே இதன் நோக்கம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வாடிக்கையாளரின் வீட்டிற்கு டெலிவரி செய்யப்படும் எல்பிஜி சிலிண்டரில் டேம்பர்-ப்ரூஃப் சீல் இருக்கும், அதில் QR குறியீடும் தெரியும். இதன் மூலம் சிலிண்டர் உற்பத்தி ஆலையில் இருந்து வாடிக்கையாளருக்கு உத்தரவாதம் அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

QR குறியீட்டை ஸ்கேன் செய்யும் போது, வாடிக்கையாளர்கள் சிக்னேச்சர் ட்யூனுடன் கூடிய பிரத்தியேகமான Pure for Sure பாப்-அப்பைக் காண்பார்கள். சிலிண்டர் தொடர்பான அனைத்து விவரங்களும் இந்த பாப்-அப்பில் கிடைக்கும். எடுத்துக்காட்டாக, நிரப்பும் போது சிலிண்டரின் மொத்த எடை என்ன, முத்திரை குறி இருந்ததா இல்லையா என்பது போன்றவை. டெலிவரியை ஏற்றுக்கொள்வதற்கு முன், வெளிப்படைத்தன்மை மற்றும் நம்பிக்கையை உறுதிசெய்து, வாடிக்கையாளர்கள் தங்கள் சிலிண்டர்களை அங்கீகரிக்க இது உதவுகிறது. சிலிண்டர் முத்திரையில் ஏதேனும் சேதம் ஏற்பட்டால், QR குறியீட்டை ஸ்கேன் செய்ய முடியாது, இதனால் டெலிவரி நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments