இன்று உலக உணவு தினம் ஆண்டுதோறும் அக்டோபர் 16 ம் தேதி உலக உணவு தினம் கொண்டாடப்படுகிறது
1945-ல், ஐநா சார்பிலான உலக உணவு மற்றும் வேளாண் அமைப்பு உருவானது. இந்த அமைப்பின் சார்பில், உலகில் உணவின்றி தவிப்பவர்களும் உதவும் நோக்கில், ஆண்டுதோறும் அக்டோபர் 16 அன்று உலக உணவு தினத்தை அனுசரிக்க, 1979-ல் முடிவானது. 150 நாடுகள் உலக உணவு தினத்தின் முக்கியத்துவத்தை ஆண்டுதோறும் பரப்ப முன்வந்தன.
பசியாற்றுவதற்கு அப்பால் ருசியின் பெயரால் திணிக்கப்படும் உணவுகள் மீதான கவலையால், இன்னொரு கோணத்தில் 2014 முதல் இந்த தினம் பிரபலமானது.மிகையான உணவின் காரணமாக வியாதிகளை வரவழைத்து அவதிப்படுவோர் இருக்கும் இதே உலகில்தான், அடுத்த வேளைக்கு உணவின்றி பட்டினியால் சாகும் மக்களும் இருக்கிறார்கள்.
கடந்த வாரம் வெளியான, 125 நாடுகளை உள்ளடக்கிய உலகளாவிய பட்டினி குறியீடு பட்டியலில், இந்தியா 111வது இடத்தில் சரிந்து வீழ்ந்தது தெரிய வந்திருக்கிறது. சகலத்திலும் நொடித்திருக்கும் பாகிஸ்தான் தேசத்தைவிட இந்தியாவின் இடம் மோசமானது. பாகிஸ்தான் (102), வங்கதேசம் (81), நேபாளம் (69) மற்றும் இலங்கை (60) என அண்டை தேசங்களை ஒப்பிடும்போது, உலகளாவிய பட்டினி குறியீடு பட்டியலில் இந்தியா(111) வெகுவாய் பின்தங்கிப் போயிருக்கிறது.
உலக உணவு தினத்தின் 2023ம் ஆண்டுக்கான கருப்பொருள், நாம் அருந்தும் நீரையும் உணவு என்பதற்குள் கொண்டுவந்து, அதன் முக்கியத்துவத்தை முரசறைந்து இருக்கிறது. அந்த வகையில் ‘நீரே உயிர், நீரே உணவு; எவரையும் தவிக்க விடாதீர்!’ என்கிறது இந்த வருடத்தின் கருப்பொருள்.
பாஸ்ட் ஃபுட் குட்பை சொல்வோம், ஆரோக்கியமான உணவை உண்போம், நீரின்றி அமையாது இவ்வுலகு. உணவு எவ்வளவு முக்கியமோ அதை விட அதிக முக்கியம் நாம் குடிக்கும் தண்ணீர் Bottle தண்ணீரை விடுத்து இயற்கையாக கிடைக்கும் தண்ணீரை கொதிக்க வைத்து அருந்துவோம் என உறுதி எடுப்போம்.