இந்திய மக்களுக்கு அடிப்படை ஆவணங்களில் ஒன்றான பான் கார்டு, இரண்டு வைத்திருந்தால் உங்களுக்கு ரூ. 10000 அபராதம் விதிக்க வாய்ப்புள்ளது. இது குறித்த முழு விவரங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.
மக்களுக்கு அடிப்படை ஆவணங்களில் ஒன்றான பான் கார்டு மூலமாக தான் வங்கி குறித்த அனைத்து சேவைகளும் செய்யப்படுகிறது.
மேலும் இதில் வங்கி எண், வருமான வரி கணக்கு என அனைத்தும் இணைக்கப்பட்டு இருக்கும்.
இந்நிலையில் பான் கார்டு உடன் ஆதாரை இணைக்க ஜூன் 30 வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் உங்களிடம் இரண்டு அல்லது அதற்கு அதிகமாக பான் கார்டு இருந்தால், உங்கள் மீது நடவடிக்கை பாயும், அதே போல அபராதமும் விதிக்கப்படும்.
உங்களிடம் 2 பான் கார்டு இருக்க சில காரணம் இருக்கிறது.
அதாவது நீங்கள் பான் கார்டு அப்ளை செய்துவிட்டு, அது சரியான நேரத்தில் வராமல் இருந்தால் நீங்கள் இன்னொரு முறை பான் கார்டு அப்ளை செய்வீர்கள்,
அதனால் உங்களிடம் 2 பான் கார்டு இருக்கும். மேலும் திருமணத்திற்கு பின் பெண்கள தங்களுடைய தந்தை பெயரை மாற்ற வேண்டும் என்றால், அதே பான் எண்ணில் மாற்றாமல் புதிய பான் கார்டுக்கு விண்ணப்பித்தால் இப்படி 2 பான் கார்டு இருக்கும். மேலும் மோசடி செய்பவர்களும் 2 பான் கார்டு வைத்திருப்பார்கள்.
அதனால் அதை கையில் வைத்துக் கொள்ளாமல் சரண்டர் செய்ய வேண்டும்.
அதாவது PAN மாற்றம் கோரிக்கை விண்ணப்ப படிவத்தை முதலில் நிரப்ப வேண்டும்.
அதில் நீங்கள் பயன்படுத்தும் PAN எண்ணை பதிவிட வேண்டும்.
மேலும் ITEM NO: 11ல், இரண்டாவது பான் எண்ணின் விவரங்களை தர வேண்டும்.
அதன் நகலையும் இணைத்து, NSDL வெப்செட்டிற்கு சென்று சமர்ப்பிக்க வேண்டும்.
ஆப்லைனில் சரண்டர் செய்ய படிவம் 49A ஐ நிரப்ப வேண்டும்.
இதை நீங்கள் செய்யாமல் 2 பான் கார்டு பயன்படுத்தினால், உங்களுக்கு அபராதம் விதிக்கப்படும்.