உங்க வீட்டு சிலிண்டருக்கு மானியம் வருதா இல்லையா? கண்டுபிடிப்பது எப்படி?

சமையல் சிலிண்டருக்கு மானியத் தொகை நிறையப் பேருக்கு வருவதில்லை. உங்களுக்கு வருகிறதா இல்லையே என்று நீங்களே செக் பண்ணலாம்.

சிலிண்டர் மானியம்:

வீட்டு உபயோகத்துக்கான சமையல் சிலிண்டருக்கு அரசு தரப்பிலிருந்து மானியம் வழங்கப்பட்டு வருகிறது. சிலிண்டர் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் இந்த மானியத் தொகை மக்களுக்கு உதவியாக இருக்கிறது. ஆனால் மானியப் பணமே வரவில்லை என்று சிலர் கூறுகின்றனர். அதேபோல, சிலர் தங்களுக்கு மானியம் வருகிறதா இல்லையா என்று தெரியாமலேயே உள்ளனர்.

எப்போது கிடைக்கும்?

நீங்கள் முதலில் சிலிண்டர் வாங்கும்போது சிலிண்டருக்கான முழு தொகையையும் கொடுத்துதான் வாங்க வேண்டும். பின்னர் அதற்கான மானியத் தொகை உங்களுடைய வங்கிக் கணக்கில் அரசு தரப்பிலிருந்து செலுத்தப்படும். கொரோனா சமயத்தில் நிறையப் பேருக்கு மானியம் நிறுத்தப்பட்டது.

ஆதார் கார்டு முக்கியம்!

புதிய் சிலிண்டர் இணைப்பு வாங்கும்போது ஆண்டு வருமானம் ரூ.10 லட்சத்துக்கு மேல் இருந்தால் மானியம் கிடைக்காது. சிலிண்டர் மானியத்தை பயனாளியின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது. அதற்கு ஆதார் முக்கியம். ஆதார் கார்டை இணைப்பதை அரசு கட்டாயமாக்கியுள்ளது. ஆதார் இணைப்புக்குப் பிறகு மானியம் தொடர்பான மோசடிகள் குறைந்துள்ளன.

கண்டுபிடிப்பது எப்படி?

சிலிண்டருக்கு முன்பதிவு செய்யும்போது அதற்கான மானியத் தொகை வருகிறதா இல்லையா என்பது பலருக்கு சந்தேகமாக இருக்கும். அதை கண்டுபிடிக்க மிகவும் எளிமையான வழி உள்ளது. ஆன்லைன் மூலமாகவே கண்டுபிடிக்கலாம். மானியத் தொகை எந்தக் கணக்கிலிருந்து மாற்றப்படுகிறது என்பதையும் நீங்கள் அதில் பார்க்க முடியும்.

எப்படி கண்டுபிடிப்பது?

சிலிண்டர் மானியம் குறித்து Mylpg.in என்ற ஆன்லைன் தளத்தில் சென்று பார்க்கலாம். உள்ளே சென்றதும் இண்டேன், பாரத் கேஸ், ஹெச்பி கேஸ் ஆகிய மூன்று சிலிண்டர் நிறுவனங்களின் புகைப்படமும் இருக்கும். அதில் உங்களுக்கு சேவை வழங்கும் நிறுவனத்தை தேர்ந்தெடுத்து உள்ளே சென்றால் மானியம் தொடர்பான விவரங்களை நீங்கள் பார்க்கலாம்.

என்னென்ன தேவை?

ஆன்லைனில் மானியம் குறித்து பார்ப்பதற்கு வாடிக்கையாளரின் மொபைல் எண், கஸ்டமர் ஐடி, மாநிலத்தின் பெயர், விநியோகஸ்தர் போன்ற விவரங்களை நிரப்ப வேண்டும். அதில் மானியம் தொடர்பான தகவல்களை நீங்கள் தெரிந்துகொள்ளலாம்.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments