உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு – B.Ed பட்டதாரிகளுக்கு ஆசிரியர் தகுதி ரத்து!

தொடக்கக் கல்வி ஆசிரியர் நியமனத்தில் உயர் நீதிமன்றம் புதிய விதிகளை அறிவித்து உத்தரவிட்டுள்ளது.

ஆசிரியர் பணி நியமனம்:


உயர் நீதிமன்றம் ஆனது தொடக்க கல்வி ஆசிரியர் நியமனம் தொடர்பான புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

2021 மற்றும் 2022 ஆம் ஆண்டு தொடக்க கல்வி ஆசிரியர் பணி நியமனம் தொடர்பான மனுக்கள் பாட்னா உயர்நீதிமன்றத்திற்கு வந்தது.

மனுவில் நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களின் கல்வித் தகுதி மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டது.

அதாவது தொடக்கக்கல்வி ஆசிரியர்கள் ஆரம்ப பள்ளி ஆசிரியர்களாக நியமிக்கலாம்.

பி.எட் பட்டம் பெற்ற ஆசிரியர்கள் ஆரம்பப் பள்ளி குழந்தைகளை கையாளும் கல்வி திறன்களை பெறவில்லை என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இது தொடர்பான விசாரணையில் B.Ed பட்டம் பெற்றவர்கள் ஆரம்ப பள்ளி ஆசிரியர்களாக நியமனம் செய்வதற்கு தகுதியானவர்களாக கருத முடியாது என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

மேலும் தொடக்க கல்வியில் டிப்ளமோ படிப்பை முடித்தவர்கள் தொடக்கப்பள்ளி ஆசிரியர் பணிகளுக்கு தகுதியுடையவர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இதன் மூலம் என் சி டி யின் 2018ம் ஆண்டு அறிவிப்பை உச்சநீதிமன்றம் ரத்து செய்து உள்ளது.

அரசியலமைப்பின் 141 வது பிரிவின்படி உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு பாட்னா உயர் நீதிமன்றம் கட்டுப்படுவதாகவும், அரசும் இதை போலவே ஆசிரியர்களை நியமனம் செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments