உலகில் முதல்முறை… தானியங்கி இயந்திரங்கள் நடத்தும் உணவகம்!

முழுக்க முழுக்க தானியங்கி இயந்திரங்களை மட்டுமே கொண்டு செயல்படும் உணவகம் கலிஃபோர்னியாவில் திறக்கப்பட்டுள்ளது. 

முழுவதும் தானியங்கி இயந்திரங்கள் நடத்தும் உலகின் முதல் உணவகம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது இந்த உணவகம்.

கலிஃபோர்னியா மாகாணத்தின் பசடேனா பகுதியில் கலி எக்ஸ்பிரஸ் என்ற தானியங்கி இயந்திரங்கள் நடத்தும் உணவகம் செயல்படத்தொடங்கியுள்ளது.

அமெரிக்காவில் தானியங்கி சமையல் இயந்திரங்கள் உற்பத்தி செய்யும் மிஸோ ரோபோட்டிக்ஸ், கலி குழுமம் மற்றும் பணப் பரிமாற்றத்திற்கு உதவும் பாப் ஐடி ஆகிய மூன்று நிறுவனங்கள் ஒன்றிணைந்து இந்த உணவகத்தை சாத்தியப்படுத்தியுள்ளன. 

இந்த உணவகத்தில் மிஸோ ரோபோட்டிக்ஸ் இயந்திரங்கள் ருசிகரமான உணவுகளைத் தயார் செய்கின்றன. வாடிக்கையாளர்கள் கோரிக்கைக்கு ஏற்பவும் உணவுகளை சமைக்கின்றன. 

அதிநவீன தொழில்நுட்ப தானியங்கி இயந்திரங்கள் மூலம் கிரில் கோழிக்கறி, எண்ணெயில் பொரித்த உணவுகள் சமைக்கப்படுகின்றன. வாடிக்கையாளர்கள் பணப்பரிமாற்றத்திற்காக பாப் ஐடி தொழில் நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. வாடிக்கையாளர்களை புகைப்படம் எடுத்துக்கொள்வதால் அவர்களின் வங்கிக்கணக்கிலிருந்து உணவுக்குத் தேவையான பணம் பெறப்படுகிறது. 

உணவுகளை ஆர்டர் பெறுவது, சமைப்பது, பரிமாறுவது என அனைத்தும் தானியங்கி இயந்திரங்கள் மூலம் மட்டுமே மேற்கொள்ளப்படுவதால், பலரின் கவனத்தை இந்த தனியங்கி இயந்திரங்கள் நடத்தும் உணவகத்தின் மீதி திரும்பியுள்ளது

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments