நாகை மாவட்டம் எட்டுக்குடி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் காலியாக உள்ள கிளர்க், கம்ப்யூட்டர் ஆபரேட்டர், தோட்டம் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது குறித்த விவரங்களை பார்க்கலாம்.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள எட்டுக்குடியில் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உள்ளது. இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்தக் கோவிலில் காலியாக உள்ள கிளர்க், கம்ப்யூட்டர் ஆபரேட்டர், தோட்டம், திருவலகு ஆகிய பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது குறித்த விவரங்களை பார்க்கலாம்
பணியிடங்கள் & கல்வி தகுதி:
கிளார்க் (01 பணியிடம்), கம்ப்யூட்டர் ஆபரேட்டர் (01), நாதஸ்வரம் (01), தோட்டம் (01), திருவலகு (01) என மொத்தம் 5 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. கல்வி தகுதியை பொறுத்தவரை தோட்டம், திருவலகு ஆகிய பணியிடத்திற்கு தமிழில் எழுத படிக்க தெரிந்தால் போதும். கிளர்க் பணிக்கு அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் பத்தாம் வகுப்பு அல்லது அதற்கு இணையான படிப்பு முடித்திருக்க வேண்டும்.
கம்ப்யூட்டர் ஆபரேட்டர் பணிக்கு கணிணி அறிவியலில் பட்டம் முடித்து இருக்க வேண்டும். தமிழ் மற்றும் ஆங்கிலம் தட்டச்சு அறிந்து இருத்தல் அவசியம். நாதஸ்வரம் (மேளம் குழு) பணிக்கு தமிழில் எழுத படிக்க தெரிந்து இருக்க வேண்டும். மேலும் சமய நிறுவனங்கள் அல்லது தமிழ்நாடு அரசு அல்லது பல்கலைக்கழக மானியக் குழுவால் நடத்தப்பெறும் இசைப்பள்ளியில் தொடர்புடைய பிரிவில் சான்றிதழ் பெற்று இருக்க வேண்டும். வயது வரம்பு & சம்பளம்: வயது வரம்பை பொறுத்தவரை 18 வயது பூர்த்தியானவர்களும் 45 வயதுக்கு மிகாதவர்களும் விண்ணப்பிக்கலாம். சம்பளத்தை பொறுத்தவரை கிளார்க், கம்ப்யூட்டர் ஆபரேட்டர், நாதஸ்வரம் ஆகிய பணியிடத்திற்கு ரூ.15,300 முதல் 48,700 வரை சம்பளமாக வழங்கப்படும். தோட்டம் பணியிடத்திற்கு ரூ. 11,600 முதல் ரு. 36,800 வரை சம்பளமாக வழங்கப்படும்
விண்ணப்பிப்பது எப்படி?:
ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் தபால் மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப படிவத்தை https://hrce.tn.gov.in/hrcehome/index_temple.php?tid=14581 என்ற இணையதளத்தில் டவுன்லோடு செய்து கொள்ளலாம்.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:
முழுமையாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, செயல் அலுவலர், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், எட்டுக்குடி, திருக்குவளை வட்டம், நாகப்பட்டினம் மாவட்டம், அஞ்சல் எண் -610204 என்ற முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்:
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய கடைசி நாள் 31.01.2024 ஆகும். அதன்பிறக் கிடைக்க பெறும் விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படாது. தேர்வு முறை: தகுதியான விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு நேர்முகத்தேர்வு அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வு அறிவிப்பினை படிக்க இங்கே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை https://hrce.tn.gov.in/hrcehome/ajax/hppdf_view.php கிளிக் செய்யவும்.