ஒரே நாடு, ஒரே ரேஷன் திட்டத்தின்கீழ், கோடிக்கணக்கான மக்கள் பலன்களை பெற்றுவரும்நிலையில், தமிழக ரேஷன் கடைகளிலிருந்து முக்கிய கோரிக்கை ஒன்று எழுந்துள்ளது.
இந்தியாவின் எந்த மாநிலத்தை சேர்ந்தவரும், எங்கும் சென்று பொருட்களை வாங்கலாம் என்ற நோக்கத்துடன், மத்திய அரசால் அறிவிக்கப்பட்டதுதான் ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை திட்டம்.
கொரோனா தொற்று பரவல் உச்சத்தில் இருந்தபோது, அதாவது, 2020ம் ஆண்டில், தொற்று நோய் தடுப்பு நடவடிக்கைகளுக்காக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டபோது, ஏழை எளிய மக்கள் அனைவரும் தங்களது அன்றாட தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள மிகவும் அவதிப்பட்டனர்.. பலர் பட்டினியால் வாடினர்.
பலன்கள்:
இதே போல வடமாநிலங்களில் இருந்து புலம்பெயர்ந்து வந்த தொழிலாளர்கள் பலர் இலவச ரேஷன் உணவு பொருட்களை கூட பெற முடியாமல் அவதி அடைந்தனர்… இதனால்தான் மத்திய அரசு “ஒரே நாடு, ஒரே ரேஷன்” திட்டத்தை 2020 அக்டோபரில் அறிமுகப்படுத்தியது.. இதன் மூலம் தங்களது சொந்த மாநிலத்தை விட்டு பிற பகுதிகளில் வசிப்பவர்களும் தாங்கள் வசிக்கும் பகுதிகளிலேயே தங்களுக்கு தேவையான உணவு பொருட்களை வாங்கிக்கொள்ள முடியும்.
மேலும், ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் நாடு முழுவதும் செயல்படுத்தப்பட்டு வருவதால் அனைத்து ரேஷன் கடைகளிலும், இ-ஸ்கேல் என்று சொல்லப்படும் எலக்ட்ரானிக் பாய்ண்ட் ஆஃப் சேல் சாதனங்கள் கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது. தற்போதும் விரல் ரேகையை சரிபார்த்துதான் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
அரசின் இந்த முடிவால் ரேஷன் இடையில் குளறுபடியும் நடக்க வாய்ப்பு இருப்பதில்லை.. அதனைப் போலவே இனிமேல் எந்த பயனர்களுக்கும் குறைவான ரேஷன் கிடைக்காது என்றும் நம்பிக்கை தெரிவிக்கப்பட்டு வருகிறது.
பொருட்கள்: தற்போதும் விரல் ரேகையை சரிபார்த்துதான் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.. அந்தவகையில், தமிழகத்திற்குள்ளும், எந்த ரேஷன் கடையிலும் பொருட்களை வாங்க ரேஷன்தாரர்களுக்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதனால், வேலைக்காக சொந்த ஊர்களை விட்டு, வேறு மாவட்டங்களுக்கு இடம் பெயர்ந்ந்துள்ள பயனாளிகள் மிகப்பெரிய பலனை பெற்று வருகிறார்கள்.
எனினும், தமிழகத்தில் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தின் மூலமாக பொதுமக்களுக்கு ரேஷன் பொருட்கள் முறையாக வழங்கப்படுவதில்லை என்று புகார்கள் அவ்வப்போது எழுந்தபடியே உள்ளது.
கடிவாளம்:
எனவேதான், இதற்கும் கடிவாளம் போட்டுள்ளது கூட்டுறவுத்துறை.. அதன்படி, ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு தேவையான உணவுப் பொருட்களை முறையாக வழங்கப்பட வேண்டும் என்றும், இதனை மீறும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்தபடியே உள்ளது.
இப்படிப்பட்ட சூழலில், இன்னொரு கோரிக்கை கிளம்பி உள்ளது.. தற்சமயம், அரிசி, சர்க்கரை குறைவாக உள்ளதாம்.. இடம் பெயர்ந்த கார்டுதாரர்கள் பயன்பெறும் வகையில், எந்த கடையிலும் பொருட்கள் வாங்கும் திட்டத்தின் கீழ், ரேஷன் கடைகளுக்கு கூடுதலாக அரிசி, சர்க்கரையை அனுப்புமாறு, தமிழக அரசுக்கு ரேஷன் கடை ஊழியர்கள் கோரிக்கை விடுத்திருக்கிறார்கள்.
ரேஷன் கார்டுகள்:
ரேஷன் கடைகளுக்கு கூடுதல் பொருட்கள் அனுப்பாமல் உள்ளதால், அந்த கடையில் இடம்பெறாத மற்ற கார்டுதாரர்களும், பொருட்களை வாங்க முடியாமல் அவதிக்குள்ளாகி இருக்கிறார்களாம். அதனால், கூடுதலாக அரிசி, சர்க்கரையை உடனடியாக அனுப்பும்படி, அரசுக்கு ரேஷன் ஊழியர்கள் கோரிக்கை விடுத்திருக்கிறார்க
ள்.