கரண்ட் பில்லில் சூப்பர் அதிரடி – சட்டென சர்ப்ரைஸ் தந்த மின்சார வாரியம்.. இதுதான் அந்த 7 மாற்றங்கள்..

தமிழக மின்வாரியம் புது அதிரடியை கையில் எடுத்துள்ளது.. இது பொதுமக்களுக்கு மகிழ்ச்சியையும், நம்பிக்கையையும் அதிகரிக்க செய்துள்ளது.

தமிழக மக்களின் வசதிக்காகவும், பயன்பாட்டுக்காகவும், மின்வாரியத்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.. அந்தவகையில், சமீபத்தில் ஒரு தகவல் வெளியாகியிருந்தது.

கரண்ட் பில் :

அதாவது வழக்கமாக, வீடுகளில் கரண்ட் பில் கணக்கெடுக்கப்பட்டதுமே, மின் ஊழியர்கள் அலுவலகம் வந்து கையடக்க கருவியில் உள்ள கணக்கெடுப்பு விபரங்களை, அலுவலக கம்ப்யூட்டரில் அப்லோடு செய்வார்கள்.. சிறிது நாளில் மின் கட்டண விபரம் நுகர்வோருக்கு, SMS வாயிலாக அனுப்பப்பட்டுவிடும்.

ஆனால், கணக்கெடுத்த உடனேயே, கட்டண விபரம் தெரிவிக்க, புது “மொபைல் செயலி” அறிமுகம் செய்ய முடிவாகியிருக்கிறாம். அதன்படி, மீட்டரிலுள்ள மின் பயன்பாடு, அதற்கான கட்டண விபரங்கள், செயலி மற்றும் மின் வாரிய சர்வரில் வந்துவிடும். உடனே, நுகர்வோருக்கு SMS சென்றுவிடும். இந்த பயன்பாடு விரைவில் தமிழகம் முழுவதும் வரப்போகிறது.

இணையதளம்:

அதேபோல, மின் வாரிய இணையதளம், செல்போன் ஆப், “பாரத் பில் பே” வாயிலாக டிஜிட்டல் முறையில் செலுத்தலாம்.. முந்தைய மின் கட்டண ரசீதுகளை பெற விரும்புவோர், அதை வெப்சைட்டில் டவுன்லோடும் செய்து கொள்ளும் வசதியை, மின்வாரியம் செயல்படுத்தி உள்ளது. அதன்படி, மின் வாரியத்தின், “எக்ஸ்'” என்ற வெப்சைட் வாயிலாக, ‘tnebnet.org/.என்ற இணையதள பக்கத்திற்கு நேரடியாக சென்று, மின் இணைப்பு எண், ரசீது எண், தேதியை பதிவிட்டு, ரசீதை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இப்படி எண்ணற்ற வசதிகளை மின்வாரியம் செய்து வரும்நிலையில், இன்னொரு அதிரடியை கையில் எடுத்துள்ளது. அதன்படி, மின்வாரிய களப்பணிகளை கண்காணிப்பதற்காகவே, புது செல்போன் செயலி வடிவமைக்கப்பட்டுள்ளதாம்.

செல்போன் ஆப் :

இது தொடர்பாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் ஐடி பிரிவு தலைமைப் பொறியாளர், மின்வாரிய அனைத்து தலைமைப் பொறியாளர்களுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியிருக்கிறார். அதில் உள்ளதாவது:

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் தாழ்வழுத்த மின் இணைப்பு பிரிவில் களப்பணிகளை மேற்கொள்வோருக்காக ஆண்ட்ராய்டு கைபேசி செயலி (எப்எஸ்எம்) உருவாக்கப்பட்டுள்ளது.

ஒப்புதல்:

இதில், மின் இணைப்பை துண்டித்தல், மீண்டும் இணைப்பு வழங்குதல், பழுதான மீட்டர்களை மாற்றுதல், புதிய மின் இணைப்பு வழங்குதல், மின் நுகர்வோர் அளிக்கும் புகார்கள் உள்ளிட்ட 7 சேவைகள் தொடர்பான தரவுகள், புகைப்படங்களை பதிவு செய்வதோடு, சரிபார்க்கவும் முடியும். இந்த செயலி மூலம் களப்பணியாளர்களுக்கான பணிகளை உதவிப் பொறியாளர் ஒதுக்கீடு செய்ய முடியும்.

மேலும், மின் நுகர்வோரின் புகார்கள், சம்பந்தப்பட்ட உதவிப் பொறியாளருக்கு நேரடியாக சென்று சேர்ந்துவிடும். இந்த செயலியை சோதனை அடிப்படையில் பயன்படுத்த மின்வாரியத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார்.



அதிரடி நடவடிக்கை:

அதன்படி, 12 வட்ட அலுவலகங்களில் உள்ள பணியாளர்களுக்கு வழங்கும் வகையில் செயலியின் ஏபிகே மின்னஞ்சல் வாயிலாக சம்பந்தப்பட்ட மேலாளர்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இதை பயன்படுத்தும்போது தொழில்நுட்ப ரீதியாக ஏதேனும் இடர்பாடுகள் இருந்தால் உடனடியாக தெரிவிக்க வேண்டும்” என்று சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments