மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் இந்த மாதம் 15ம் தேதி ரூபாய் 1000 வழங்கப்பட உள்ளது. இந்த நிலையில் இந்த முறை பணம் வழங்குவதில் சில மாற்றங்கள் இருக்கலாம் என்று கூறப்படுகிறது
மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் மாதம் மாதம் ரூபாய் 1000 வழங்கப்பட்டு வருகிறது. கடந்த மாதம் 15ம் தேதி முதல் தொகை வழங்கப்பட்டது. இந்த நிலையில் இந்த மாதம் இரண்டாம் கட்ட தொகை வழங்கப்பட உள்ளது.
இரண்டாம் கட்ட தொகை 15ம் தேதிதான் வழங்கப்பட வேண்டும் எல்லா மாதமும் 15ம் தேதிதான் வழங்கப்பட வேண்டும். ஆனால் இந்த மாதம் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் இந்த மாதம் 14ம் தேதி ரூபாய் 1000 வழங்கப்பட உள்ளது. மாத சம்பளம் வழங்கும் தேதி பொதுவாக வழங்கப்படும் தேதியில் சனி, ஞாயிறு வந்தால் ஒருநாள் முன்னதாகவே சம்பளம் வழங்கப்படும் அதுபோலவேதான் இந்த முறையும் ஒரு நாள் முன்னதாக 14ம் தேதி உரிமைத்தொகை ரூபாய் 1000 வழங்கப்பட உள்ளது. 15ம் தேதி விடுமுறை என்பதால் இப்படி முன்கூட்டியே வழங்கப்படுகிறது.
கூடுதல் பணம்: இந்த முறை பணம் வழங்குவதில் சில மாற்றங்கள் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. அதன்படி இந்த முறை கூடுதலாக ஒரு சிலருக்கு இந்த பணம் வழங்கப்பட உள்ளது. கடந்த முறை பெண்களிடம் ஏற்கனவே இருக்கும் வங்கி கணக்கில் பணம் கொடுக்கப்பட்டது. வங்கி கணக்கு இல்லாதவர்களுக்கு புதிதாக கூட்டுறவு வங்கிகள் மூலம் வங்கி கணக்குகள் தொடங்கப்பட்டது.
இவர்கள் எல்லோருக்கும் வங்கி கணக்குகள் ஆதாருடன் இணைக்கப்பட்டது. இந்த நிலையில்தான் எல்லோருக்கும் பணம் அனுப்பப்பட்டது. 1.70 கோடி பேர் இந்த திட்டத்திற்கு விண்ணப்பம் செய்து இருந்தனர் தற்போது வரை 1.064 கோடி பேர் இந்த திட்டத்தில் தேர்வாகி உள்ளனர். இதில் வங்கி கணக்கில் சிக்கல் உள்ள சிலருக்கு நேரடியாக மணி ஆர்டர் மூலம் பணம் அனுப்பப்பட்டது. இந்த நிலையில்தான் இரண்டாம் மாத தொகை தற்போது மீண்டும் அனுப்பப்பட உள்ளது. இதில் கூடுதலாக 1- 2 ஆயிரம் பேருக்கு இந்த தொகை வழங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த திட்டத்திற்கு 1.70 கோடி விண்ணப்பித்த நிலையில் கிட்டத்தட்ட 70 லட்சம் பேரின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டு உள்ளது. இந்த நிராகரிக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் மேல்முறையீடு செய்ய முடியும். இதற்கு முன் சில விஷயங்களை நீங்கள் கவனிக்க வேண்டும். ஒருவேளை நீங்கள் இந்த திட்டத்திற்கு விண்ணப்பித்து அதில் உங்களுக்கு பணம் வரவில்லை என்றால் நீங்கள் இ-சேவை மூலம் மேல்முறையீடு செய்யலாம் என அரசு அறிவித்திருந்தது
பலர் இந்த திட்டத்தின் கீழ் மேல்முறையீடு செய்து, அதில் தேர்வான சிலருக்கும், நேரடியாக முதலமைச்சரிடம் புகார் வைத்த சிலருக்கும் பணம் அனுப்ப முடிவு செய்யப்பட்டு உள்ளது. அதன்படி இந்த 14ம் தேதி கூடுதலாக சிலருக்கு பணம் அனுப்பப்படும்.
யாருக்கு இந்த அரசு உதவி கிடைக்காது
உங்களிடம் கார் உள்ளிட்ட வாகனங்கள் இல்லை என்பதை உறுதி செய்யவும். உங்கள் கணவர், நீங்கள் அரசு வேலையில் இல்லை என்பதை உறுதி செய்யவும். உங்களிடம் ஆதார் கார்டு இணைக்கப்பட்ட வங்கி கணக்கு உள்ளதா என்பதை பார்க்கவும். திட்டத்தில் கொடுக்கப்பட்ட வரையறைகள் அனைத்தையும் நீங்கள் பூர்த்தி செய்திருக்க வேண்டும். குடும்பத்தில் ஆண்டு வருமானம் ரூபாய் 2.5 இலட்சம் மேல் ஈட்டி வருமானவரி கணக்கு தாக்கல் செய்பவர்கள் மற்றும் வருமான வரி செலுத்துபவர்கள் என்றால் பணம் கிடைக்காது.
மாநில, மத்திய அரசு ஊழியர்கள்/ பொதுத்துறை நிறுவனங்கள்/ வங்கிகளின் ஊழியர்கள்/ வாரியங்கள், உள்ளாட்சி அமைப்புகள், கூட்டுறவு அமைப்புகளின் ஊழியர்கள் ஊராட்சி வார்டு கவுன்சிலர்கள் தவிர்த்த உள்ளாட்சி பிரதிநிதிகள் என்றால் மேல்முறையீடு செய்ய முடியாது.சொந்த பயன்பாட்டுக்கு கார், ஜீப், டிராக்டர், கனரக வாகனம் போன்ற நான்கு சக்கர வாகனங்கள் வைத்துள்ளவர்கள் என்றால் மேல்முறையீடு செய்ய முடியாது. ஆண்டுக்கு 50 லட்சத்திற்கும் மேல் ஆண்டு விற்பனை (Annual Turnover) செய்து ஜிஎஸ்டி செலுத்தும் தொழில் நிறுவன உரிமையாளர்கள் என்றால் மேல்முறையீடு செய்ய முடியாது.
ஏற்கனவே முதியோர் ஓய்வூதியம் (OAP), விதவை ஓய்வூதியம், அமைப்புசாராத் தொழிலாளர் நலவாரிய ஓய்வூதியம் போன்ற சமூகப் பாதுகாப்புத் திட்ட ஓய்வூதியம் மற்றும் அரசிடமிருந்து ஓய்வூதியம் பெறும் குடும்பங்கள் என்றால் மேல்முறையீடு செய்ய முடியாது. இவை இல்லாத மற்றவர்களுக்கு பணம் அனுப்பப்படும் என அரசு தரப்பில் அறிவிப்பு வெளியாகி உள்ளது.