டெல்லி: இந்திய கடற்படையில் இன்று இணைக்கப்படும் இம்பால் ஒய் 12706 போர்க் கப்பலானது ஸ்டெல்த் தொழில்நுட்ப வழிகாட்டுதலுடன் கட்டமைக்கப்பட்ட ஏவுகணை அழிப்புக் கப்பலாகும்.
இந்திய கடற்படையின் புதிய வரவாக இன்று இணைகிறது இம்பால் ஒய் 12706 போர்க் கப்பல். இந்தக் கப்பலை பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று கடற்படையில் இணைக்கிறார்.
இம்பால் ஒய் 12706 போர்க் கப்பலின் 10 முக்கிய அம்சங்கள்:
நான்கு ‘விசாகப்பட்டினம் கிளாஸ்’ அழித்தொழிப்பு போர்க் கப்பல்களில் மூன்றாவது கப்பல் இம்பால் ஒய் – 12706. ‘போர்க்கப்பல் திட்டமான ’15 பி திட்டத்தின்’ கீழ் மசாகான் டாக் ஷிப் பில்டர்ஸ் லிமிடெட் (எம்.டி.எல்) நிறுவனத்தில் கட்டப்பட்ட அடுத்த தலைமுறை ஏவுகணை அழிப்பான் கப்பல்களில் மூன்றாவது கப்பல் 12706 (இம்பால்). ரகசியமாக ஊடுருவும் ஸ்டெல்த் தொழில்நுட்ப வழிகாட்டுதலுடன் கட்டமைக்கப்பட்ட ஏவுகணை அழிப்புக் கப்பல் இம்பால் ஒய் – 12706. இம்பால் ஒய் – 12706 வடகிழக்கு நகரமான இம்பால் என பெயரிடப்பட்ட முதல் போர்க்கப்பல். இதற்கான ஒப்புதல் 2019 ஏப்ரல் 16 அன்று ஜனாதிபதியால் வழங்கப்பட்டது. ஏப்ரல் 2019 இல் இம்பால் என்று பெயரிடப்பட்ட இந்தக் கப்பல், அக்டோபர் 20, 23 அன்று எம்.டி.எல் நிறுவனத்தால் இந்திய கடற்படைக்கு வழங்கப்பட்டது
வடகிழக்கு பிராந்தியத்தின் தேசிய பாதுகாப்பு, இறையாண்மை மற்றும் செழிப்பின் முக்கியத்துவத்தை இந்தப் பெயர் சுட்டிக்காட்டுகிறது. துறைமுகத்திலும் கடலிலும் கடுமையான மற்றும் விரிவான சோதனை திட்டத்தை முடித்த பின்னர் 20 அக்டோபர் 2023 அன்று இம்பால் இந்திய கடற்படையிடம் ஒப்படைக்கப்பட்டது. 2023 நவம்பரில், நீட்டிக்கப்பட்ட தூர சூப்பர்சோனிக் பிரம்மோஸ் ஏவுகணையை வெற்றிகரமாக சோதித்தது. கப்பலின் சின்னம் 2023 நவம்பர் 28 அன்று புதுதில்லியில் மணிப்பூர் முதலமைச்சர் மற்றும் பிற மூத்த பிரமுகர்கள் முன்னிலையில் பாதுகாப்பு அமைச்சரால் திறந்து வைக்கப்பட்டது.
இந்தியக் கடற்படையின் போர்க்கப்பல் வடிவமைப்பு பிரிவால் வடிவமைக்கப்பட்டு, எம்.எஸ்.எம்.இ மற்றும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு உள்ளிட்ட பொது மற்றும் தனியார் துறைகளின் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளுடன் எம்.டி.எல் உருவாக்கிய ஒரு அதிநவீன போர்க்கப்பல் இம்பால். இந்தப் போர்க்கப்பல் முழுக்க, முழுக்க இந்தியக் கடற்படையின் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வடிவமைக்கப்பட்டது. மிகக் குறைந்த நேரத்தில் தனது கடல்சார் சோதனைகளை உருவாக்கி, நிறைவேற்றிய முதல் உள்நாட்டு அழிப்புக் கப்பல் ஆகும்
உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ‘ஐஎன்எஸ் இம்பால்’ கப்பல் இன்று நாட்டுக்கு அர்ப்பணிக்கப்படுகிறது. இந்த விழாவில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்கிறார்.
வங்கக்கடல், அரபிக்கடல் மற்றும் இந்திய பெருங்கடல் என மூன்று முக்கிய கடல்களை எல்லையாக கொண்டிருக்கும் இந்தியாவுக்கு கடற்படையை வலுவாக கட்டமைக்க வேண்டியது அவசியமாகும். அந்த வகையில் புதிய அப்டேட்களை இந்திய கடற்படை தொடர்ந்து கொடுத்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக தற்போது ஐஎன்எஸ் இம்பால் எனும் போர் கப்பலை களத்தில் இறக்கியுள்ளது. சுமார் 163 மீ நீளமும், 7,400 டன் எடையும் கொண்ட இந்த கப்பல் நாட்டின் கடல் எல்லைகளை பாதுகாப்பதில் மிக முக்கிய பங்கு வகிக்கும்.
நாட்டின் வடகிழக்கு மாநிலத்தில் உள்ள நகரத்தின் பெயரை இந்த கப்பலுக்கு சூட்டியுள்ளதன் மூலம் நாட்டின் ஒற்றுமையை இந்திய கடற்படை வெளிப்படுத்தியுள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். இந்த கப்பலின் சிறப்பம்சமே இதில் இருக்கும் சூப்பர் சோனிக் ஏவுகணைதான். மணிக்கு 1,236 கி.மீ வேகத்தில் சென்னு இந்த ஏவுகணைகள் இலக்கை தாக்கும். இந்த கப்பலின் கட்டுமானத்தில் 75 சதவிகிதம் உள்நாட்டு பொருட்களே பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. இதில் நீர்மூழ்கி கப்பலை தாக்கும் வகையில் ஏவுகணைகள் இருப்பதால் கடல் பரப்பில் இந்த கப்பலை தாண்டி எதுவும் இந்திய எல்லைக்குள் ஊடுருவ முடியாது. நம்ப முடியாத குறைந்த காலத்தில் இந்த போர் கப்பல் சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. கடந்த 2017ம் ஆண்டு, இந்த கப்பலை கட்டும் பணிகள் தொடங்கின. இரண்டு ஆண்டுகளில் 2019ம் ஆண்டில் கப்பலின் முழு கட்டுமானமும் முடிக்கப்பட்டு சோதனைக்காக கடலில் இறக்கப்பட்டது. அதன் பின்னர் ஒவ்வொரு தொழில்நுட்பமாக மேம்படுத்தப்பட்டிருக்கிறது. ஆங்கிலேயர்கள் காலத்தில், விடுதலைக்காக போராடிய மணிப்பூர் மக்களின் தியாகங்களை நினைவுகூரும் வகையில் இம்பால் எனும் பெயர் சூட்டப்பட்டிருக்கிறது.
சமீப காலமாக சீனாவின் உளவு கப்பல்கள் இந்திய பெருங்கடல் பகுதியில் கடும் ஆதிக்கத்தை செலுத்தி வருகின்றன. எனவே இதற்கு முடிவுகட்ட இந்தியா தனது கடற்படையின் பலத்தை கொஞ்சம் கொஞ்சமாக கூட்டி வருகிறது. இதன் வெளிப்பாடாகத்தான் ஐஎன்எஸ் இம்பால் இருக்கிறது. இந்த கப்பல் இன்று மும்பையில் உள்ள கடற்படை தளத்திலிருந்து பயன்பாட்டுக்கு வருகிறது. இந்த நிகழ்ச்சியில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் பங்கேற்கிறார்.