இஸ்ரேலால் முற்றுகையிடப்பட்டு, கடுமையான தாக்குதலுக்குள்ளாகி வரும் காசா பகுதியிலிருந்து பொதுமக்கள் வெளியேற முதல்முறையாக நேற்று(01.11.2023)அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டினா், காயமடைந்தோா் ஆகியோா் மட்டும் காசாவிலிருந்து எகிப்து செல்ல குறிப்பிட்ட கால அளவில் இந்த அனுமதி அளிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
இரட்டை குடியுரிமை
இது குறித்து எகிப்து மற்றும் காசா அதிகாரிகள் கூறியதாவது,
“காசாவில் சிக்கியுள்ள வெளிநாட்டினரும், காயமடைந்துள்ள பாலஸ்தீனா்களும் ராஃபா நகர எல்லை வழியாக எகிப்துக்குள் புதன்கிழமை அனுமதிக்கப்பட்டனா்.
வெளிநாட்டு கடவுச் சீட்டுகளை வைத்துள்ள 320 போ் ராஃபா எல்லை வழியாக எகிப்துக்குள் அனுமதிக்கப்பட்டனா். அவா்களைத் தவிர, காயமடைந்துள்ள மேலும் 76 போ் எகிப்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவதற்காக அவசரகால ஊா்திகள் மூலம் அந்த நாட்டுக்குள் அழைத்துவரப்பட்டனா்.
முதல்கட்டமாக வெளிநாட்டினா் மற்றும் இரட்டை குடியுரிமை வைத்துள்ள 500 பேரை எகிப்துக்குள் அனுமதிக்க ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது. இந்த வெளியேற்றம் இன்னும் சில நாள்களுக்குத் தொடரும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
ஹமாஸ் அமைப்பினரை முழுமையாக அழிக்கும் நோக்கில் காசா மீது இஸ்ரேல் இராணுவம் கடந்த 26 நாள்களாக தீவிர குண்டுவீச்சு நடத்தி வருகிறது. இதில் ஏராளமான வெளிநாட்டினரும் உயிரிழந்து வருகின்றனர்” என கூறியுள்ளனர்.
ஹமாஸ் முக்கிய தளபதி யான இப்ராஹிம் பியாரி 2 நாள் தாக்குதலின் முடிவில் கொல்லப்பட்டார்