![](https://tamizhaacademy.in/wp-content/uploads/2023/11/image-47.png)
கேரளாவைச் சேர்ந்த 97 வயது முதியவர் நீண்டகாலம் வழக்கறிஞராக பணிபுரிந்து கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்…
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தை சேர்ந்த பி.பாலசுப்ரமணியன் மேனன் எனபவர் 73 ஆண்டுகளாக வழக்குரைஞராக பணியாற்றி வருகிறார்.
இதையடுத்து நீண்டநாட்களாக வழக்குரைஞராக பணியாற்றி வரும் நபர் என்ற பெருமையை பெற்று கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளார்.
இதுகுறித்து கின்னஸ் உலக சாதனை புத்தக அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் கேரளத்தை சேர்ந்த பி.பாலசுப்ரமணியன் மேனன் எனப்வர் 73 ஆண்டுகள் 60 நாள்கள் வழக்குரைஞராக பணியாற்றி வருகிறார்.நீண்டநாட்களாக வழக்குரைஞராக பணியாற்றி வரும் நபர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மெட்ராஸ் சட்டக் கல்லூரியில் தனது படிப்பை முடித்து 1950 – ஆம் ஆண்டு முதல் பாலசுப்ரமணியன் வழக்குரைஞராக பணியாற்றி வருகிறார்.