தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் பணிகள் மும்முரமாக நடந்து கொண்டிருக்கும் நிலையில் இப்பொழுது புதிதாக ஒரு கோரிக்கை ஒன்று வலியுறுத்தப்படுகிறது.
அதற்கான விளக்கங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 உரிமைத்தொகை திட்டத்தை அமல்டுத்துவதற்கான நடைமுறை முறைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் ரேஷன் அட்டைதாரர்கள் அரசுக்கு முக்கிய கோரிக்கை விடுத்துள்ளது. அது என்னவென்றால்,
தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு ரேஷன் கடைகள் வாயிலாக ரூ.1000 வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் வாயிலாக மாநிலம் முழுவதும் சுமார் 1 கோடி மகளிர் பயனடைவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டம் செப்.15 முதல் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் திட்டம் தொடர்பான பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது.
அதன் படி ரேஷன் அட்டைதாரர்கள் வாயிலாக ஜூலை 20 முதல் டோக்கன் வழங்கும் பணி தொடங்கவுள்ளது.
ஏற்கனவே ரேஷன் அட்டைதாரர்களுக்கு பணி சுமை அதிகமாகவுள்ள நிலையில் தற்போது டோக்கன் கொடுக்கும் பணியையும் மேற்கொள்ளவிருப்பதால் அதற்கான ஊக்கத்தொகை வழங்கப்பட வேண்டும் என ஊழியர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஒரு கார்டுக்கு ரூ.35 ஊக்கத்தொகையாக வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தி உள்ளது.