கூட்டுறவு வங்கி வேலை பற்றிய அடுத்த பெரிய குட்நியூஸ் – அமைச்சர் பெரியகருப்பன் – முழு விவரங்கள்☆

கூட்டுறவுத்துறையில் காலியாக உள்ள சுருக்கெழுத்து, தட்டச்சர் பணியிடங்கள் விரைவில் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் அடிப்படையில் நிரப்பப்படும் என கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் கூறினார்.

விவசாயிகளுக்கு கூட்டுறவு வங்கிகள் மூலம் இந்த ஆண்டு 16500 கோடி ரூபாய் பரிசு வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் பெரிய கருப்பன் கூறினார்.

முன்னதாக தமிழகத்தில் உள்ள கூட்டுறவு பண்டகசாலை, நகர கூட்டுறவு வங்கி பணியாளர் கூட்டுறவு கடன் சங்கம், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், வேளாண் விற்பனையாளர் சங்கம் உள்ளிட்ட உட்பட பல்வேறு கூட்டுறவு சங்கங்களில் உதவியாளர் காலிப் பணியிடங்களுக்கு 2257 பேர் தேர்வு செய்யப்பட உள்ளதாக கூட்டுறவுத்துறை அறிவிப்பு வெளியிட்டிருந்தது.

மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை – 2257 என்கிற நிலையில் அதிகபட்சமாக சேலத்தில் 140 இடங்களும் சென்னையில் 132 இடங்களும், ராமநாதபுரத்தில் 112 இடங்களும், கோவையில் 110 இடங்களும், திருச்சியில் 99 இடங்களும் காலியாக உள்ளன.

மாவட்ட வாரியாக காலிபணியிட விவரங்கள்: சேலம் – 140, ராமநாதபுரம் – 112, கோவை – 110, சென்னை – 132, திண்டுக்கல் – 67, ஈரோடு – 73, காஞ்சிபுரம் – 43, கள்ளக்குறிச்சி – 35, கன்னியாகுமரி – 35, சிவகங்கை – 28, திருப்பத்தூர் – 48, திருவாரூர் – 75, தூத்துக்குடி – 65, திருநெல்வேலி – 65,திருப்பூர் – 81, திருவள்ளூர் – 74, திருச்சி – 99, ராணிப்பேட்டை – 33, தஞ்சாவூர் – 90,திருவண்ணாமலை – 76, கடலூர் – 75, பெரம்பலூர் – 10, வேலூர் – 40, விருதுநகர் – 45, தருமபுரி – 28, மதுரை – 75, நாமக்கல் – 77, புதுக்கோட்டை – 60, தென்காசி – 41, தேனி – 48, விழுப்புரம் – 47 கரூர் – 37, கிருஷ்ணகிரி – 58, மயிலாடுதுறை – 26, நாகப்பட்டினம் – 8, நீலகிரி – 88, அரியலூர் – 28, செங்கல்பட்டு – 73.

கல்வி தகுதி: இளங்கலை பட்டப்படிப்புடன் கூட்டுறவு பயிற்சி முடித்து இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். கூட்டுறவு பயிற்சியை பொறுத்தவரை தமிழ்நாடு ஒன்றிய கூட்டுறவு மூலம் நடத்தப்படும் கூட்டுறவு மேலாண்மை நிலையங்களில் வழங்கப்படும் கூட்டுறவு பயிற்சி, சென்னை நடேசன் கூட்டுறவு மேலாண்மை நிலையம் மற்றும் மதுரை கூட்டுறவு மேலாண்மை நிலையம் மூலம் நடத்தப்படும் உயர் மேலாண்மை பயிற்சி முடித்தவர்கள் விண்ணப்பிக்க முடியும்

வயது தகுதி: 18 வயது முதல் 32 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இருப்பினும் எஸ்.சி/ எஸ்.டி/ பி.சி/ எம்.பி.சி/ பி.சி.எம் உள்ளிட்ட பிரிவினர்களுக்கு வயது வரம்பு எதுவும் இல்லை.

ஊதியம்: கூட்டுறவு சங்கங்களுக்கு ஏற்ப ஊதியம் நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்தந்த சங்கங்களின் இணையதளம் சென்று பார்க்கலாம்.

தேர்வு செய்யப்படும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு கூட்டுறவுத்துறையால் நடத்தப்படும் எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு அடிப்படையில் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

எழுத்து தேர்வு நடைபெறும் நாள்: 24.12.2023

விண்ணப்பிக்கும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு அந்தந்த மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்க கடைசி நாள்: டிசம்பர் 1ம்தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். (01.12.2023).

இதனிடையே பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிவிப்பில் “தமிழ்நாடு முழுவதும் உள்ள கூட்டுறவு சங்கங்களுக்கு 2257 உதவியாளர்கள் மற்றும் இளநிலை உதவியாளர்கள் கூட்டுறவுத்துறை மூலம் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. அரசுத்துறை, பொதுத்துறை பணியாளர்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலமாகவே தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்று தமிழக அரசு கொள்கை முடிவு எடுத்த பிறகும் கூட்டுறவுத்துறை தனியாக ஆள்தேர்வு நடத்துவது நியாயமற்றது.

கூட்டுறவு சங்கங்களுக்கு நியமிக்கப்படவுள்ள 2257 உதவியாளர்கள் மற்றும் இளநிலை உதவியாளர்கள் மாநில அளவில் தேர்ந்தெடுக்கப்பட மாட்டார்கள் என்றும், மாவட்ட அளவில் கூட்டுறவுத்துறையின் கீழ் இயங்கும் சட்டப்பூர்வமான அமைப்பான மாவட்ட ஆள்தேர்வு மையம் மூலமாகவே போட்டித்தேர்வு மற்றும் எழுத்துத் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. பத்தாம் வகுப்புக்கும் கூடுதலான கல்வித்தகுதி கொண்ட பணிகளுக்கு மாநில அளவில் தான் ஆள்தேர்வு செய்யப்பட வேண்டும் என்ற நடைமுறைக்கு மாறாக மாவட்ட அளவில் கூட்டுறவுத் துறையே நேரடியாக ஆள்களை நியமிப்பது முறையல்ல. எனவேவ தமிழ்நாடு முழுவதும் உள்ள கூட்டுறவு சங்கங்களில் உள்ள 2257 உதவியாளர்கள் மற்றும் இளநிலை உதவியாளர்கள் பணியிடங்களுக்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் நிரப்ப வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இந்நிலையில் : கூட்டுறவுத்துறையில் காலியாக உள்ள சுருக்கெழுத்து, தட்டச்சர் பணியிடங்கள் விரைவில் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் அடிப்படையில் நிரப்பப்படும் என கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் கூறினார். விவசாயிகளுக்கு கூட்டுறவு வங்கிகள் மூலம் இந்த ஆண்டு 16500 கோடி ரூபாய் பரிசு வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் பெரிய கருப்பன் கூறினார்.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments