மத்திய மாநில அரசுகள் அவ்வப்போது தங்கள் கொள்கை விதிகளை மாற்றி அமைக்கின்றன. பொதுமக்களுக்கு சிறந்த சேவைகளை வழங்க, பல்வேறு துறைகளின் செயல்திறனை மேம்படுத்த புதிய விதிகள் மற்றும் விதிமுறைகளை மத்திய, மாநில அரசுகள் அமல்படுத்துவது வழக்கம்.
அந்த வகையில் பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் சில மாற்றங்கள் அறிவிக்கப்பட உள்ளன. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.
LPG விலை அறிவிப்பு:
LPG சமையல் எரிவாயுவின் திருத்தப்பட்ட விலை பிப்ரவரி 1ம் தேதி அறிவிக்கப்பட உள்ளது. அன்று 2023-2024 ஆம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதால் இது முக்கியமாக கருதப்படுகிறது.
மின்னஞ்சல் விதிகள்:
Google மற்றும் Yahoo கணக்குகள் மூலம் மொத்த மின்னஞ்சல் அனுப்பும் செயல்முறை பிப்ரவரி 1ம் தேதி முதல் மாறுகிறது.
இது ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 5000 மின்னஞ்சல்களை அனுப்பும் டொமைன்களை பாதிக்கிறது. அதிக எண்ணிக்கையிலான அஞ்சல்களை தொடர்ந்து அனுப்ப, DMARC தரநிலைகளை பின்பற்ற வேண்டும்.
DMARC என்பது டொமைன் அடிப்படையிலான அங்கீகாரம். இது மின்னஞ்சல்கள் உண்மயானவை, ஸ்பேம் அல்லாதவை என்பதை உறுதிப்படுத்தும் அம்சமாகும்.
மொத்தமாக மின்னஞ்சல் அனுப்புபவர்கள் 0.3 சதவீதத்திற்கும் குறைவாக ஸ்பேம் வைத்திருக்க வேண்டும். உரிய மின்னஞ்சல்களுக்கு மட்டும் அனுப்புவதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
இந்த புதிய விதிகள் பின்பற்றப்பட்டால் நீங்கள் மொத்தமாக அனுப்பும் மின்னஞ்சல்கள் நிராகரிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
NPS திரும்ப பெறுதல் மாற்றங்கள்:
ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் (PFRDA) வழிகாட்டுதல்களின்படி தேசிய ஓய்வூதிய அமைப்பிலிருந்து (NPS) பணம் எடுப்பதற்கான விதிகள் பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் மாற்றம் செய்யப்பட உள்ளது. டிசம்பர் 2023-ல் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த மாற்றங்கள் NPS சந்தாதாரர்களுக்கு அதிக பயனளிக்கும்.
புதிய விதிகளின்படி NPS சந்தாதாரர்கள் பல்வேறு தனிப்பட்ட தேவைகளுக்காக தங்கள் ஓய்வூதிய கணக்கிலிருந்து பகுதியளவு தொகையை எடுக்கலாம். சட்டப்படி தத்தெடுக்கப்பட்ட குழந்தைகள், திருமணச் செலவுகள் உள்ளிட்ட குழந்தைகளின் உயர்கல்விச் செலவுகளுக்காகத் தொகையை திரும்ப பெறலாம். கூடுதலாக வீடு அல்லது பிளாட் வாங்கவோ அல்லது கட்டவோ நிதியை பெறலாம்.
மத்திய பட்ஜெட்டில் வருமான வரியை அடுத்து நடுத்தர மக்கள் அனைவரும் கவனம் செலுத்துவது பெட்ரோல், டீசல் விலை..நாளை, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யும் பட்ஜெட்டில் அது குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.