இந்திய அரசாங்கம் பெண் குழந்தைகளுக்காக சுகன்யா சம்ரிதி யோஜனா என்ற சேமிப்பு திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இந்த திட்டத்தின் மூலம் ரூ.44 லட்சம் சேமிக்க முடியும்.
பெண் குழந்தைகளின் எதிர்காலம் குறித்த கவலை சிறுவயதில் இருந்தே ஆரம்பமாகிவிடும் என்பது, பெண் குழந்தைகளின் பெற்றோருக்கு நன்றாகவே தெரியும். பெண் குழந்தைகளின் கல்வி முதல் திருமணம் வரை தேவையான அனைத்தியும் பூர்த்தி செய்ய ஆரம்பத்தில் இருந்தே முதலீடு செய்ய வேண்டும்.
இத்தகைய சூழலில் எதில் முதலீடு செய்வது, எந்த சேமிப்பு திட்டத்தை தேர்வு செய்வது என குழப்பமடைவர். அதற்கான சிறந்த தீர்வு தான் மத்திய அரசின் சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டம்.
இந்திய அரசின் இந்த திட்டம் பெண் குழந்தைகளுக்கு மிகவும் பயனுள்ள திட்டமாகும். 10 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளின் பெயரில் இந்த கணக்கை திறக்கலாம். தற்போது இந்த திட்டத்திற்கு ஆண்டுக்கு 8% வட்டி வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் முதலீடு செய்ய விரும்பும் பெற்றோர், ஆண்டுக்கு ரூ.1.5 லட்சம் வரை முதலீடு செய்யலாம்.
மத்திய அரசின் 5 லட்ச ரூபாய்க்கான இலவச மருத்துவ காப்பீட்டு அட்டை!!!
இந்த திட்டத்தின் முதிர்வு காலம் 21 ஆண்டுகள் ஆகும். எனவே இந்த திட்டத்தில் 15 ஆண்டுகள் முதலீடும் செய்ய வேண்டும். பெற்றோர்கள் தங்கள் பெண் குழந்தைக்கு 18 வயது நிறைவடைந்ததும் திருமணம் அல்லது கல்வி செலவுக்காக பணம் எடுத்துக்கொள்ளலாம்.
Sukanya Samriddhi Yojanaவில் யார் இணையலாம்?
1. ஒரு பெண் குழந்தை 10 வயது அடையும் வரை அவர் பெயரில் கணக்கைத் தொடங்கலாம்.
2. ஒரு பெண் குழந்தைக்கு ஒரு கணக்கு மட்டுமே தொடங்க முடியும்.
3. பெண் குழந்தையின் பெற்றோர் அல்லது பாதுகாவலர், தங்கள் குழந்தையின் பெயரில், பிறப்புச் சான்றிதழுடன் கணக்கைத் தொடங்கலாம்.
4. ஒரு குடும்பத்தில் அதிகபட்சமாக இரு பெண் குழந்தைகளுக்கு மட்டுமே இத்திட்டத்தின் கீழ்கணக்கைத் தொடங்கலாம்.
எங்கு தொடங்கலாம்
இந்தியாவில் இருக்கும் அஞ்சலக அலுவலகங்கள், பல்வேறு அரசு மற்றும் தனியார் வங்கிகளில் இத்திட்டத்துக்கான சேவை வழங்கப்பட்டு வருகிறது. இந்தியாவுக்குள் எங்கு வேண்டுமானாலும் இந்த கணக்கை மாற்றம் செய்து கொள்ளலாம்.
வட்டி எவ்வளவு?
ரூ.44 லட்சம் சேமிக்க வேண்டும் என்றால் ஆண்டுக்கு ரூ.1 லட்சம் வீதம் அதாவது ஒரு நாளைக்கு ரூ. 300 வீதம் சுமார் 15 ஆண்டுகளுக்கு முதலீட்டு தொகையை செலுத்த வேண்டும். இதற்கு 8% வட்டி வழங்கப்படும். எனவே மொத்த தொகையில் வட்டி ரூ.29,89,690 உங்கள் வங்கியில் செலுத்தப்படும்.
இதில் மிகவும் கவனிக்க வேண்டிய மற்றும் ஈர்ப்பான விஷயம் என்னவென்றால், இத்திட்டத்தின் கீழ் பெறப்படும் வட்டிக்கு கூட வருமான வரி செலுத்த வேண்டியதில்லை.
செல்வமகள் சேமிப்புத் திட்டத்தில் ரூ.2000 முதலீடு செய்தால் கிடைக்கும் இலாபங்கள் என்னென்ன?
Click Here to Join: