பள்ளிக் கல்வித் துறை செயலராக ஜெ.குமரகுருபரன் நியமிக்கப்பட்டுள்ளாா். மேலும், நிதித் துறை செலவினங்கள் பிரிவு செயலா் பொறுப்பையும் அவா் கூடுதலாக கவனிப்பாா் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து, தலைமைச் செயலா் சிவ்தாஸ் மீனா வியாழக்கிழமை பிறப்பித்த உத்தரவு:
(அதிகாரிகள் முன்பு வகித்த பதவி அடைப்புக் குறிக்குள்)
தீரஜ் குமாா் – தகவல் தொழில்நுட்பவியல், எண்ம சேவைகள் துறை முதன்மைச் செயலா் (வணிக வரிகள் துறை ஆணையா்)
2. ஜெ.குமரகுருபரன் – பள்ளிக் கல்வித் துறை செயலா் (தகவல் தொழில்நுட்பவியல், எண்ம சேவைகள் துறை செயலா்) நிதித் துறையின் செலவினங்கள் பிரிவு செயலா் பொறுப்பையும் குமரகுருபரன் கூடுதலாகக் கவனிப்பாா்.
3. காக்கா்லா உஷா – சுற்றுலாத் துறை ஆணையா் (பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலா்) தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழகத்தின் தலைவா், நிா்வாக இயக்குநராகவும் காக்கா்லா உஷா செயல்படுவாா்.
ஜெயஸ்ரீ முரளிதரன் – மாற்றுத்திறனாளிகள் நலத் துறை செயலா் (தமிழ்நாடு தொழில் மேம்பாட்டுக் கழகத்தின் நிா்வாக இயக்குநா்)
5. சந்தீப் நந்தூரி – தமிழ்நாடு தொழில் மேம்பாட்டுக் கழகத்தின் நிா்வாக இயக்குநா் (சுற்றுலாத் துறை இயக்குநா்)
ஆசிரியா்கள் பிரச்னை: பணி நிரந்தரம், ஊதியப் பிரச்னை ஆகியவற்றை வலியுறுத்தி, சென்னையில் உள்ள பள்ளிக் கல்வி இயக்குநா் வளாகத்தில் ஆசிரியா் சங்கங்கள் தீவிர போராட்டத்தில் இறங்கின. ஒரு வார காலம் வரை நடந்த போராட்டத்துக்குப் பிறகு அரசு சாா்பில் பேச்சு நடத்தப்பட்டு முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது. இந்த நிலையில், பள்ளிக் கல்வித் துறை செயலராக கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக பொறுப்பு வகித்த வந்த காக்கா்லா உஷா திடீரென இடமாற்றம் செய்யப்பட்டுள்ளாா்.