நிறுவனம்∶
நிறுவனத்தின் பெயர்∶
சென்னை மெட்ரோ ரயில்
பணியின் பெயர்∶
சென்னை மெட்ரோ ரயில் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, பொது மேலாளர் (General Manager)பணிக்கு 2 பேர், கூடுதல் பொது மேலாளர் (Additional General Manager) பணிக்கு ஒருவர், இணை பொது மேலாளர் (Joint General Manager) பணிக்கு ஒருவர், துணை பொது மேலாளர் (Deputy General Manager) பணிக்கு 3 பேர், மேலாளர் (Manager) பணிக்கு 5 பேர், துணை மேலாளர்/உதவி மேலாளர்(Deputy Manager/Assistant Manager) பணிக்கு 3 பேர், லைன் சூப்பர்வைசர்/க்ரூ கன்ட்ரோலர் (Line Supervisor/Crew Controller) பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள்∶
சென்னை மெட்ரோ ரயில் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, பொது மேலாளர் (General Manager)பணிக்கு 2 பேர், கூடுதல் பொது மேலாளர் (Additional General Manager) பணிக்கு ஒருவர், இணை பொது மேலாளர் (Joint General Manager) பணிக்கு ஒருவர், துணை பொது மேலாளர் (Deputy General Manager) பணிக்கு 3 பேர், மேலாளர் (Manager) பணிக்கு 5 பேர், துணை மேலாளர்/உதவி மேலாளர்(Deputy Manager/Assistant Manager) பணிக்கு 3 பேர், லைன் சூப்பர்வைசர்/க்ரூ கன்ட்ரோலர் (Line Supervisor/Crew Controller) பணிக்கு ஒருவர் என மொத்தம் 16 பேர் பணிக்கான various விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
கடைசி தேதி∶
இப்பணிக்கான விண்ணப்பிக்கும் கடைசி தேதி∶ 22.03.2024
வயது வரம்பு:
பொது மேலாளர் பணிக்கு 45 வயது முதல் 55 வயதுக்குள்ளும், கூடுதல் பொது மேலாளர் பணிக்கு 47 வயதுக்குள்ளும், இணை பொது மேலாளர் பணிக்கு 43 வயதுக்குள்ளும், துணை பொது மேலாளர் பணிக்க 40 வயதுக்குள்ளும், மேலாளர் பணிக்கு 38 வயதுக்குள்ளும், துணை மேலாளர்/உதவி மேலாளர் பணிக்கு 30 முதல் 35 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும். மேலும் லைன் சூப்பர்வைசர்/க்ரூ கண்ட்ரோலர் பணிக்கு ஓய்வு பெற்றவராக இருக்க வேண்டும். வயது வரம்பு என்பது 07.02.2024 என்ற தேதியின் அடிப்படையில் கணக்கீடு செய்யப்படும்.
கல்வித்தகுதி∶
பொது மேலாளர், கூடுதல் பொது மேலாளர், இணை பொதுமேலாளர், துணை பொது மேலாளர், மேலாளர், துணை மேலாளர்/ உதவி மேலாளர் பணிகளுக்கு பணிக்கு பிஇ, பிடெக் பிரிவில் இசிஇ, சிஎஸ்இ, ட்ரிபில்இ, சிஎஸ்இ படிப்புகளில் ஒன்றை முடித்திருக்க வேண்டும். லைன் சூப்பர்வைசர்/க்ரூ கண்ட்ரோலர் பணிக்கு ஏதேனும் ஒரு பிரிவில் என்ஜினீயரிங் முடித்திருக்க வேண்டும். இந்த பணி என்பது Deputation அடிப்படையிலானது. இதனால் பணிக்கு விண்ணப்பம் செய்வோர் ரயில்வே அல்லது மத்திய அரசு நிறுவனத்தில் குறைந்தபட்சம் 2 ஆண்டு முதல் அதிகபட்சமாக 20 ஆண்டுகள் பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
சம்பள விவரங்கள்:
பொது மேலாளர் பணிக்கு மாதசம்பளமாக ரூ.2.25 லட்சம் வழங்கப்படும். கூடுதல் பொது மேலாளர் பணிக்கு ரூ.1.60 லட்சம், இணை பொது மேலாளர் பணிக்கு ரூ.1.45 லட்சம், துணை பொது மேலாளர் பணிக்கு ரூ.1.25 லட்சம், மேலாளர் பணிக்கு ரூ.85 ஆயிரம், துணை மேலாளர்/உதவி மேலாளர் பணிக்கு ரூ.62 ஆயிரம் முதல் ரூ.75 ஆயிரம், லைன் சூப்பர்வைசர்/க்ரூ கண்ட்ரோலர் பணிக்கு அரசு விதிகளின் படியும் சம்பளம் வழங்கப்படும்.
தேர்வு செயல்முறை∶
இது ஒரு ஒப்பந்த அடிப்படையிலான பணியாகும். டெபுடேஷன் அடிப்படையில் விண்ணப்பித்து தேர்வு செய்யப்படும் நபர்கள் முதலில் 3 ஆண்டு வரை பணியமர்த்தப்படுவார்கள். அதிகபட்சமாக 5 ஆண்டு வரை பணி நீட்டிப்பு என்பது வழங்கப்படும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை∶
தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் https://careers.chennaimetrorail.org/ இணையதளம் மூலம் மார்ச் மாதம் 24ம் தேதிக்குள் விண்ணப்பம் செய்ய வேண்டும். விண்ணப்ப கட்டணமாக ரூ.300 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எஸ்சி, எஸ்டி பிரிவினர் என்றால் விண்ணப்ப கட்டணமாக ரூ.50 வழங்க வேண்டும்.
Download Notifications PDF
Apply online
Click Here to Join: