செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் மாதந்தோறும் ரூ.2000 முதலீடு செய்தால் இந்த திட்டம் முதிர்ச்சியடைந்த பிறகு ரூ.11,16,815 ஆக பெற்றுக்கொள்ள முடியும்.
குறைவான முதலீடு மற்றும் நல்ல லாபம் தரக்கூடிய திட்டமாக செல்வமகள் சேமிப்பு திட்டம் விளங்கி வருவதால் கடந்த சில மாதத்தில் மட்டுமே எக்கச்சக்கமான பெற்றோர்கள் தங்களது பெண் குழந்தைகளின் பெயரில் கணக்கு துவங்கியுள்ளனர்.
அதாவது, பெற்றோர்கள் அல்லது பாதுகாவலர்கள் பத்து வயதிற்கு மேற்பட்ட பெண் குழந்தையின் பெயரிலேயே செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் கணக்கு துவங்க இயலும்.
15 ஆண்டுகளுக்கு இந்தத் திட்டத்தில் டெபாசிட் செய்த பின்னர் 21 ஆண்டுகளுக்குப் பின்னர் முதலீடு செய்த தொகையை பெற முடியும்.
அதாவது, செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் 8 சதவீத வட்டி வழங்கப்படுவதால் மாதத்திற்கு 2000 வீதத்தில் முதலீடு செய்யும் பட்சத்தில் 21 ஆண்டுகள் கழித்து 11,16,815 ரூபாயாக பெற்றுக் கொள்ளலாம்.
மேலும், 21 ஆண்டுகளுக்கு முன்பாகவே பணம் தேவைப்பட்டால் 50 சதவீத தொகையை பெற்றுக் கொள்ள இயலும்.
மேலும், மகளின் மேற்படிப்பிற்காக இந்த முதலீட்டு தொகையை பெற விரும்பினால் மகளின் மேற்படிப்பு சான்றிதழை ஒப்படைத்து தேவையான பணத்தை பெற்றுக்கொள்ளலாம்.
மேலும், ஐந்து தவணைகளில் இது போல தேவைக்கான பணத்தை எடுத்துக் கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த திட்டம் உதிர்வு அடைவதற்கு முன்பாகவே சிறுமி இறந்து விட்டால் அதற்கான முதலீடு செய்த பணத்தை பெற்றோர்கள் அல்லது பாதுகாவலர்கள் வட்டியுடன் சேர்த்து பெற்றுக் கொள்ளலாம் எனவும்,
இந்த தொகையை பெறுவதற்கு சிறுமியின் இறப்பு சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த கணக்கு துவங்கப்பட்ட பெண் குழந்தை அல்லது அவர்களது பெற்றோர்கள் கணக்கு முதிர்வடைவதற்கு முன்பாகவே இறந்து விட்டாலும் இந்த கணக்கை பாதியிலேயே மூடிவிட்டு அதற்கான தொகையை பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.