பெண் குழந்தைகளின் எதிர்காலத்துக்கு மத்திய அரசு வழங்கும் சிறு சேமிப்பு திட்டமே செல்வ மகள் சேமிப்பு திட்டம்.. இந்த திட்டத்தில் எப்படி இணைவது தெரியுமா? இதற்கான தகுதிகள் என்ன தெரியுமா? தற்போதைய இதன் வட்டி விகிதம் எவ்வளவு தெரியுமா?
கடந்த 2015ல் பிரதமர் மோடி, தொடங்கி வைத்திருக்கும் இந்த சிறுசேமிப்புத் திட்டத்துக்கு பொதுமக்களிடம் நிறைய வரவேற்பு உள்ளன. இதற்கு பல காரணங்கள் இருக்கின்றன.

அக்கவுண்ட்:
முக்கியமாக, பிற சேமிப்பு திட்டங்களைவிடவும், அதிக வட்டி இந்த திட்டத்தில் வழங்கப்படுகிறது.. வெறும் ரூ.250 அல்லது நீங்கள் விரும்பும் தொகையை செலுத்தி, இந்த கணக்கை தொடங்கலாம்.
அதிகபட்சமாக ஒருவருடத்தில் ரூ. 1.5 லட்சம் வரையும் செலுத்தலாம்.
இந்த சிறு சேமிப்பு திட்டத்தில், மாதா மாதம் செலுத்த வேண்டும் என்ற அவசியமில்லை.
ஒரு வருடத்துக்கு மொத்தமாக செலுத்தலாம்.,. சேமிப்புக் கணக்கிற்கு முதிர்வு என்பது, கணக்கு தொடங்கப்பட்ட அன்றிலிருந்து 21 வருடங்களில் நிறைவு பெறும்.
ஆனால் நீங்கள் கணக்கு தொடங்கியதிலிருந்து 15 வருடங்கள் வரை மட்டும்தான் சேமிப்பு தொகையை செலுத்த முடியும் என்பது மிக முக்கியமான விஷயம்.
பெண் குழந்தைகள்:
பெண் குழந்தை 18 வயதை எட்டும்போது அவர்களுடைய கல்வி செலவுக்கு இந்த முதலீட்டிலிருந்து பாதி தொகையை எடுத்துக்கொள்ளலாம்.
அதுமட்டுமல்லாது நீங்கள் வெளியூர்களுக்கு இடம் பெயர்கிறீர்கள் என்றால், அந்த ஊருக்கும் இந்த திட்டத்தின் அக்கவுண்ட்டை மாற்றிக்கொள்ளலாம்.
ஆனால், ஒருவேளை பணத்தை சரியாக கட்டதவறினால், டெபாசிட்டுடன் வருடத்துக்கு 50 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டியிருக்கும்.
அபராதத்தை செலுத்திவிட்டுத்தான், கணக்கை புதுப்பிக்க முடியும்.. சம்பந்தப்பட்ட பெண் குழந்தைக்கு 18 வருடங்கள் முடிவடைந்திருந்தால், அவசர தேவைக்காக இடையிலேயே பணத்தை எடுத்து கொள்ளலாம்.
யார் ஆரம்பிக்கலாம்:
தபால் அலுவலகத்தில் இதற்கான கணக்கை துவங்கலாம். இந்த திட்டத்தின் கீழ் 10 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளின் பெற்றோர்கள் தங்கள் மகள்களின் பெயரில் கணக்கு தொடங்கலாம்.
குழந்தைக்கு ஒரு கணக்கு மட்டுமே தொடங்க முடியும். ஒரு குடும்பத்தில் 2 பெண் குழந்தைக்கு மட்டுமே இந்த கணக்கினை தொடங்க முடியும்.
ஆனால், இரண்டாவது, பெண் குழந்தைக்கு 10 வயது நிரம்பியிருக்கக்கூடாது. அதாவது, குழந்தை பிறந்து 10 ஆண்டுகள் வரை இந்த திட்டத்தில் எப்போது வேண்டுமானாலும் சேரலாம்.
ஒரு குடும்பத்தில் அதிகபட்சம் 2 பெண் குழந்தைகளை மட்டுமே இணைக்க முடியும்.
ஒருவேளை இரட்டை குழந்தைகள் அல்லது ஒரே பிரசவத்தில் 3 பெண் குழந்தைகள் என்றால், அவர்களுக்கென்றே விதி விலக்கு உண்டு.
பெண் குழந்தையின் பெற்றோர் மட்டுமல்லாமல், சட்டபூர்வமான பாதுகாவலர் குழந்தையின் சார்பாகவும் கணக்கில் சேரலாம்.
எப்படி துவங்குவது:
இந்த திட்டத்தின்கீழ், எங்கே கணக்கை துவங்குவது தெரியுமா? எப்படி துவங்க வேண்டும் தெரியுமா? போஸ்ட் ஆபீஸ்களில் இந்த கணக்கினை தொடங்கலாம்.
அல்லது பொதுத்துறை அல்லது தனியார் துறை வங்கிகள் மூலம் தொடங்கி கொள்ளலாம். ஒருவேளை நேரடியாக போஸ் ஆபீஸ் போக முடியாவிட்டால், ஆன்லைன் மூலமாகவே ஆக்டிவேட் செய்ய முடியும்.
இது தவிர பொதுத்துறை வங்கிகளான SBI, போன்ற வங்கிகளின் வெப்சைட்களிலும் டவுன் லோடு செய்து கொள்ளலாம்.
தனியார் வங்கிகளான ICICI BANK, AXIS BANK, HDFC BANK போன்ற வெப்சைட்களில் இருந்தும் பெறலாம்.
– முதலில், வங்கி அல்லது தபால் நிலையத்தில் கிடைக்கும் SSA 1 என்ற படிவத்தை நிரப்ப வேண்டும்.
– படிவத்தில் பெண் குழந்தையின் பெயர், பெற்றோர் அல்லது பாதுகாவலர் பெயர், குழந்தையின் பிறப்பு சான்றிதழ் மற்றும் பாதுகாவலர் அல்லது பெற்றோரின் KYC தகவலை பதிவிட வேண்டும்.
– குழந்தை மற்றும் பெற்றோர்களின் உரிய ஆவணங்கள், சான்றுகளையும் நிரப்ப வேண்டும்.
– இறுதியாக வங்கி அல்லது தபால்நிலையம் உங்கள் கணக்கை ஆக்டிவேட் செய்துவிடும். அப்போதே உங்களுக்கான பாஸ்புக்கையும் தந்துவிடுவார்கள்.
வட்டி விகிதம்:
சுகன்யா சம்ரித்தி யோஜனா திட்டத்தின்கீழ் ஒவ்வொரு 3 மாதங்களுக்கும் வட்டித்திருத்தம் செய்யப்படுகிறது… அந்தவகையில், 10 நாட்களுக்கு முன்பு, மத்திய அரசு சூப்பர் அறிவிப்பை வெளியிட்டிருந்தது..
அதன்படி, இந்த திட்டத்தின்கீழ் சேமிப்பை ஆரம்பிப்போருக்கு, 8.0 சதவிகிதம் வட்டி ஏற்கனவே வழங்கப்பட்டிருந்தது.
ஆனால், தற்போது இதனை 0.2 சதவிகிதம் உயர்த்தி, அதாவது 8.2 சதவிகிதமாக நிர்ணயித்துள்ளது.. இதன் மூலம் மாதம் ரூ.1000 முதலீடு செய்தால் முதிர்வு காலத்தில் ரூ.5,70,205ஐ பெற முடியும்.
இந்த வட்டி உயர்வானது, பொதுமக்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை தந்து வருவதுடன், இந்த திட்டத்திலும் இணைய ஆர்வம் காட்டி வருகிறார்கள்.