
சென்னை: மத்திய உளவுத்துறையில் உதவி மத்திய புலனாய்வு அதிகாரி பிரிவில் காலியாக உள்ள 995 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம். பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.44,900 முதல் ரூ.1.42 லட்சம் வரை மாத ஊதியமாக வழங்கப்படும்.
மத்திய உள்துறை அமைச்சகத்தின் உளவுத்துறையில் காலியாக உள்ள பணியிடங்கள் அவ்வப்போது முறையான அறிவிப்புகளுடன் நிரப்பப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தற்போது புதிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.
அதன்படி மத்திய உளவுத்துறையில் உதவி மத்திய புலனாய்வு அதிகாரி கிரேட் II எக்ஸிக்கியூட்டிவ் (Assistant Central Intelligence officer Grade II Executive or ACIO Grade II Executive) பணிக்கு மொத்தம் 995 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இந்த பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் குறைந்தபட்சம் ரூ.44 ஆயிரத்த 900 சம்பளமாக வழங்கப்படும். அதிகபட்சமாக ரூ.1 லட்சத்து 42 ஆயிரத்து 400 வரை வழங்கப்படும். அதோடு விண்ணப்பம் செய்வோர் மத்திய, மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி, பல்கலைக்கழங்களில் டிகிரி படிப்பை முடித்திருக்க வேண்டும்.
இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோர் குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தியடைந்து இருக்க வேண்டும். அதிகபட்சம் என்றால் 27 வயதுக்குள் இருக்க வேண்டும். ஓபிசி பிரிவினர் என்றால் 3 வயது வரையும், எஸ்சி, எஸ்டி பிரிவினர் என்றால் 5 வயது வரையும் தளர்வு என்பது வழங்கப்படும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் mha.gov.in இணையதளம் மூலம் டிசம்பர் மாதம் 15ம் தேதிக்குள் விண்ணப்பம் செய்ய வேண்டும். விண்ணப்பம் செய்யும்போது 2 வகையான கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பொதுப்பிரிவினரை பொறுத்தவரை தேர்வு கட்டணமாக ரூ.100, விண்ணப்ப கட்டணமாக ரூ.450 என மொத்த ரூ.550 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு விண்ணப்பம் செய்வோர் எழுத்து தேர்வு மற்றும் நேர்க்காணல் முறையில் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கான விண்ணப்பம் செய்யும் முறை வரும் நவம்பர் 25ம் தேதி முதல் தொடங்க உள்ளது. அன்றைய தினம் முதல் விண்ணப்பத்தாரர்கள் டிசம்பர் 15ம் தேதி வரை விண்ணப்பம் செய்யலாம்.
Click Here to Join: