டெல்லி வந்தடைந்த பூடான் மன்னரை வரவேற்ற மத்திய அமைச்சர் ஜெய்சங்கர்

இரண்டு நாள் அரசு பயணமாக பூடான் மன்னர் ஜிக்மே கேசர் நாம்ங்யெல் வாங்சுங் இந்தியா வந்துள்ளார். நேற்று காலை டெல்லி விமான நிலையம் வந்த ஜிக்மே கேசரை, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் கைகுலுக்கி உற்சாகமாக வரவேற்றார்.

இந்த 2 நாள் பயணத்தின்போது குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உள்ளிட்டோரை பூடான் அரசர் ஜிக்மே சந்தித்துப் பேச வுள்ளார். 2017-ல் இந்தியா, சீனா இடையே ஏற்பட்ட டோக்லாம் பிரச்சினைக்குப் பிறகு பூடான், இந்தியா இடையே நட்புறவு அதிகரித்துள்ளது.

இந்தியாவின் நட்புறவு நாடுகளில் பூடானுக்கு அதிக முக்கியத்துவம் உண்டு. 50 வருடங்களுக்கு மேலாக இந்த நட்புறவு நீடித்து வருகிறது. இரு நாடுகளுக்கு இடையிலான பாதுகாப்பு விஷயங்கள் மற்றும் பாதுகாப்பு தொடர்பான ஒப்பந்தங்கள் கடந்த சில ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் கண்டுள்ளன. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பூடான் அரசர் ஜிக்மே இந்தியாவுக்கு வந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பூடான் மன்னரின் இந்த வருகை இந்தியாவின் மதிப்புமிக்க கூட்டாளருடனான நட்பு மற்றும் ஒத்துழைப்பின் பிணைப்புகளை மேலும் வலுப்படுத்தும் என்று தெரிவித்துள்ளார்.

பூடான் மன்னர் ஜிக்மே வாங்சுக் பிரதமர் மோடியை சந்திக்க உள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. முன்னதாக, பூடான் மன்னர் தனது 8 நாள் இந்தியப் பயணத்தை அசாமில் இருந்து கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது

Click Here to Join:

WhatsApp Channal Link

Telegram Group link 

YouTube link

Instagram link 

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments