தபால் நிலையங்களில் ஆதார் சிறப்பு முகாம்.. ஐம்பது ரூபாய் மட்டுமே கட்டணம். விவரம் இதோ…

  • தபால் நிலையங்களில் ஆதார் சிறப்பு முகாம்.. ஐம்பது ரூபாய் மட்டுமே கட்டணம். விவரம் இதோ…
  • ஆதார் என்பது ஒவ்வொரு தனி நபரின் தனித்துவமான அடையாளத்தை நிறுவும் நோக்கத்திற்காக இந்திய அரசாங்கத்தின் சார்பாக இந்திய தனித்துவ அடையாள ஆணையம் தனிநபர்களுக்கு வழங்கிய தனிப்பட்ட அடையாள எண்.
  • இது இந்தியாவில் எங்கும் அடையாளம் மற்றும் முகவரிக்கான சான்றாக செயல்படும்.
    இந்த நிலையில் அஞ்சல் அலுவலகத்தில் ஆதார் சிறப்பு முகாம் தற்போது நடைபெற்று வருகிறது.
  • இது குறித்து விளக்கம் அளிக்கிறார் புதுக்கோட்டை மாவட்ட தலைமை அஞ்சல் அதிகாரி லலிதா.
  • இந்த ஆதார் சேவைக்காக அனைத்து அஞ்சலகங்களிலும் தனியாக ஒரு கவுண்ட்டர் திறக்கப்பட்டுள்ளது.
  • இந்த ஆதார் சேவை காலை 8 மணி முதல் மாலை எட்டு மணி வரை இருக்கும்.
  • இங்கு பொது மக்களுக்கு பழைய ஆதார் அட்டையை அப்டேட் செய்வது, புதிய ஆதார் அட்டை விண்ணப்பிப்பது, தொலைபேசி எண் மாற்றுவது, முகவரி மாற்றுவது, போன்ற அனைத்து சேவைகளும் வழங்கப்பட்டு வருகிறது.
  • விண்ணப்பிக்க பிறந்த சான்றிதழ் தேவையான ஆவணம் ஆகும் அத்தோடு பழைய ஆதார் அட்டையை புதுப்பிக்க ஏதேனும் ஒரு அடையாள சான்றிதழ் இருந்தால் போதுமானது ஆகும்.
  • இவை அனைத்திற்கும் சேவை கட்டணமாக ரூபாய் 50 மட்டுமே வசூலிக்கப்படுகிறது.
  • பொதுமக்களின் இணைய சேவை எளிதாக்கும் வகையில் அனைத்து அஞ்சல் அலுவலகங்களில் இந்த ஆதார் முகம் நடத்தப்பட்டு வருகிறது.
  • இதனை அனைத்து மக்களும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார் அஞ்சல் அதிகாரி.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments