தகுதியுள்ள பெண்களுக்கு மாதம் தோறும் 15ஆம் தேதி ரூ.1000 உரிமை தொகை வழங்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் தகுதியுள்ள பெண்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்பட்டு வரும் நிலையில், இனி அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் பணம் வழங்கப்படலாம் என்றும் அதற்கான அறிவிப்பு பட்ஜெட்டில் இடம்பெறலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
மகளிர் உரிமைத்திட்டம் என்ற பெயரில் தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் அவரவர் வங்கிக் கணக்கிற்கு அனுப்பப்பட்டு வருகிறது. மாதந்தோறும் 15ஆம் தேதி வழங்கப்பட்டு வரும் இந்த பணம் தற்போது வரை ஒரு கோடியே 6 லட்சம் மகளிர் இதில் பயனடைந்து வருகின்றனர்.
மேலும், மேல்முறையீடு செய்த 11 லட்சத்து 85 ஆயிரம் பேரில் அவ்வபோது சிலருக்கு பணம் வழங்கப்பட்டு வருகிறது. மீதமுள்ளவர்களின் விண்ணப்பங்கள் பரிசீலனையில் உள்ளதாகவும் அவர்களது ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு அதில் தகுதியானவர்களுக்கு அடுத்த மாதம் முதல் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் எனவும் தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
விரைவில் நாடாளுமன்ற தேர்தல் வர உள்ளதால், செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களை மேம்படுத்தும் அறிவுப்புகளும், அதற்கான நிதி ஒதுக்கீடும், ஊக்கமளிக்கும் திட்டங்களும் இடம்பெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக, இனி அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் பணம் வழங்கப்படலாம் என்றும் அதற்கான அறிவிப்பு பட்ஜெட்டில் இடம்பெறலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
மக்களவை தேர்தல் வருவதால் அனைவருக்கும் உரிமைத்தொகை வழங்கப்படும் என அதிமுக தேர்தல் பிரச்சாரத்தில் சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி வேலுமணி தெரிவித்துள்ளார்.