தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் பணிகளை செய்ய 93 கூடுதல் பணியிடங்கள் உருவாக்கப்பட்டு இருப்பதாக தேர்தல் துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
கூடுதல் பணியிடங்கள்
தமிழகத்தில் விரைவில் பாராளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. அதனால், அரசு தேர்தல் துறையில் பணிபுரிய ஊழியர்கள் தேவைப்படுகின்றனர்.
அதாவது, தேர்தல் நடைபெறும் போது பணி அதிகமாக இருப்பதால் கூடுதல் பணியாளர்கள் நியமனம் செய்யப்பட வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.
அதிலும், வாக்குப்பதிவு முடிந்து வாக்கு எண்ணிக்கை முடியும் வரை வேலை அதிகமாக இருக்கும்.
இதனை கருத்தில், கொண்டு பாராளுமன்ற தேர்தல் நடவடிக்கைகள் நிறைவடையும் காலமான ஜூன் 30 வரை கூடுதலான பணியிடங்களை ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
தேர்தலுக்காக மாவட்ட வருவாய் அதிகாரி, துணை ஆட்சியர், தாசில்தார், துணை தாசில்தார், அலுவலக உதவியாளர், இளநிலை உதவியாளர் என 93 புதிய பணியிடங்கள் உருவாக்க ஒப்புதல் வழங்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில், சில பணியிடங்களுக்கு அரசின் ஊதியத்தை நியமிக்க முடியாத பட்சத்தில் ஒப்பந்த அடிப்படையில் ஊழியர்களை நியமித்துக் கொள்ளலாம் என தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு உத்தரவிட்டுள்ளார்.