தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை ஒட்டி அரசின் சார்பில் பரிசுத்தொகுப்பு வழங்கப்படுமா என பொதுமக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
பரிசுத்தொகுப்பு:
தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டு பண்டிகையையொட்டி ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பாக ஒரு கிலோ அரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு மற்றும் ரூ.1000 ரொக்க தொகையும் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு அரசின் சார்பில் பொங்கல் பரிசு தொகை மற்றும் தொகுப்பு வழங்கப்படுமா என்கிற கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.அதாவது, பொங்கல் பண்டிகைக்கு இன்னும் இரண்டு வாரங்கள் இருக்கும் நிலையில் தற்போது வரையிலும் பொங்கல் பரிசு தொகுப்பு குறித்த அறிவிப்பை அரசு வெளியிடவில்லை என பாஜக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். ஆனால், தற்போது ரேஷன் கடைகளின் வாயிலாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ. 6 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படுவதால் தான் தமிழக அரசு தொகுப்பை வெளியிடவில்லை. ஒரு சில நாட்களில் தமிழக அரசின் சார்பில் பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் பரிசுத்தொகை குறித்த அறிவிப்பு வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் பொங்கல் பண்டிகைக்கு இன்னும் சில நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ. 1500 வழங்க வேண்டும் என தமாகா தலைவர் வலியுறுத்தி உள்ளார்.
தமிழக மக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றாக பொங்கல் பண்டிகை இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 15 ஆம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்படும் நிலையில், தமிழக அரசு சார்பில் பொங்கல் பரிசு தொகுப்புடன், ரொக்கமும், கரும்பும் வழங்கப்படும். ஆனால், இந்த ஆண்டு அரசு இது குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. இந்நிலையில், தமிழக அரசு வழங்க இருக்கும் பொங்கல் பரிசு குறித்து தமாகா தலைவர் ஜி.கே. வாசன் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.அதில், இந்த ஆண்டு தமிழக அரசு வழங்க இருக்கும் பொங்கல் தொகுப்பில் குறைந்தபட்சம் ரூ. 1500, முழு கரும்பு அவசியம் இடம் பெற வேண்டும். குறிப்பாக இயற்கை சீற்றத்தால் சென்னை மற்றும் தென் மாவட்டங்கள் உள்ளிட்ட மற்ற மாவட்ட பகுதிகளில் பெய்த கனமழை, பெரு வெள்ளம் போன்றவற்றால் விவசாயிகள் பொது மக்கள் பாதிக்கப்பட்டதை கவனத்தில் கொண்டு பொங்கல் தொகுப்பை கூடுதலாக வழங்கவேண்டும். மேலும் கரும்பு கட்டாயம் வழங்க வேண்டும் எனவும், அதனை விவசாயிகளிடம் இருந்து நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.