தமிழகத்தில் 4000 பேருக்கு வேலைவாய்ப்பு – முதல்வர் சூப்பர் அறிவிப்பு!
தமிழகத்தில் பெரம்பலூர் மாவட்டம் சிப்காட்டில் காலணி தொழிற்சாலையை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதில் பேசிய அவர் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டார்.
தமிழகத்தில் பெரம்பலூர் மாவட்டம் எறையூரில் உள்ள சிப்காட் தொழிற்பூங்காவில் அமைந்துள்ள ஃபீனிக்ஸ் கோத்தாரி காலணி பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள ஜேஆர் ஒன் காலணி உற்பத்தி தொழிற்சாலையை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அப்போது காணொலி காட்சி மூலமாக பேசிய அவர் கடந்த ஆண்டு நவம்பர் மாதம்தான் பெரம்பலூர் மாவட்டம் எறையூர் சிப்காட் தொழில் பூங்காவைத் திறந்து வைத்து ஃபீனிக்ஸ் கோத்தாரி காலணி பூங்காவுக்கும் அடிக்கல் நாட்டினேன் இப்போது அதன் துவக்க விழாவில் பேசுவது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர் தமிழகத்தில் வளர்ச்சி திட்டங்கள் மூலம் வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என தெரிவித்தார். மேலும் 2023 ஆம் ஆண்டுக்குள் 1 டிரில்லியன் டாலர் பொருளாதார மாநிலம் என தமிழகம் இருக்க வேண்டும் என தெரிவித்தார். ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கத்தில், 400 கோடி ரூபாய் செலவில் 250 ஏக்கர் பரப்பளவில் காலணி உற்பத்திப் பூங்கா அமைக்க திட்டமிடப்பட்டிருப்பதாகவும் இதன் மூலம் 20 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
முதற்கட்டமாக 400 கோடி முதலீட்டில் 4000 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்க கோத்தாரி குழுமத்தைச் சார்ந்த JR One கோத்தாரி காலணி உற்பத்தித் தொழிற்சாலை துவக்கி வைக்கப்படுகிறது. 2028 ஆம் ஆண்டுக்குள் கோத்தாரி ஃபீனிக்ஸ் நிறுவனம், மேலும் 2,440 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 29 ஆயிரத்து 500 நபர்களுக்கு வேலைவாய்ப்பு என்று விரிவாக்கம் செய்ய திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
Click Here to Join: