தமிழகத்தில் காலியாக உள்ள செவிலியர் பணிகளுக்கான பணி நியமன ஆணை குறித்து தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் அவர்கள் தகவல் வெளியிட்டுள்ளார்.
பணி நியமன ஆணை:
தமிழக அரசின் கீழ் செயல்பட்டு வரும் மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தின் மூலமாக அரசு மருத்துவமனைகளுக்கான செவிலியர்கள் அனைவரும் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
தமிழகம் முழுவதும் உள்ள செவிலியர் காலிப்பணியிடங்கள் அனைத்தும் கணக்கிடப்பட்டு விரைந்து நிரப்புவதற்கு அரசு முன்னதாக உறுதி அளித்திருந்தது.
மேலும், தற்காலிக மருத்துவ பணியாளர்களும் நிரந்தர பணியாளர்களாக நியமிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், 2300 செவிலியர்களுக்கு பணி நியமனம் வழங்குவதற்கான அரசாணை சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.
இவர்களில் தற்போது 800 செவிலியர்களுக்கு அடுத்த வாரம் பணிநியமன ஆணை வழங்கப்பட உள்ளதாகவும், காலிப்பணியிடங்களுக்கு ஏற்ப பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டு வருவதாகவும் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் அவர்கள் செய்தியாளர்களிடம் தகவல் தெரிவித்துள்ளார்.