சென்னை புயலால் பாதிக்கப்பட்ட குடிமக்களுக்கு குடும்ப அட்டையில் பேர் இருந்தாலே அவர்களுக்கான நிவாரணம் வழங்கப்படும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
வெள்ள நிவாரணம்:
மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட பெறும் பாதிப்பால் சென்னை மக்கள் தற்போது வரையிலும் முழுமையாக மீள முடியாமல் தவித்து வருகின்றனர்.
மேலும், வேளச்சேரி, பள்ளிக்கரணை உள்ளிட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், வெள்ளத்தால் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் நிவாரணம் வழங்க உள்ளதாகவும், வெள்ளத்தால் சிரமத்திற்குள்ளான 30 லட்சம் குடிமக்களுக்கு ரூ. 6000 வழங்கியுள்ளதாகவும், சேதமடைந்த குடிசைகளுக்கு ரூ.8000மும், பசு உள்ளிட்ட கால்நடைகள் உயிரிழந்ததற்கு நிவாரணமாக ரூ. 37, 500 வழங்க இருப்பதாகவும் முதல்வர் அறிவித்துள்ளார்.
இந்நிலையில், ரேஷன் கார்டு மூலமாகவே நிவாரணத் தொகை வழங்க திட்டமிட்டுள்ள நிலையில் ரேஷன் கார்டு இல்லாதவர்களுக்கு எப்படி வழங்கப்படும் என கேள்வி எழுப்பிய நிலையில் ரேஷன் கார்டில் ஒருவர் பெயர் இருந்தாலே அவர்களுக்கு வெள்ள பாதிப்பு நிவாரணம் வழங்கப்படும் என தமிழக அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது