தமிழக அரசு : பொங்கல் கிப்ட் ரூ.1000 + உரிமைத்தொகை.. பொங்கல் பரிசு தொகுப்பில் “இவங்களுக்கே” முன்னுரிமை!!!

10ம் தேதியே 1 கோடியே 15 லட்சம் மகளிரின் வங்கி கணக்குகளுக்கு அனுப்பி வைக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருக்கும் நிலையில், தமிழக அரசின் பொங்கல் பரிசும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது.

பொங்கல் பண்டிகையை மக்கள் சிறப்புடன் கொண்டாடுவதற்காக வருடந்தோறும், தமிழக அரசு சார்பில் அரிசி, சர்க்கரை, கரும்பு போன்றவற்றுடன் பணம் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது.

அந்தவகையில், இந்த வருடமும் தைப்பொங்கலையொட்டி அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும், இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பாக 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, முழு கரும்பு மற்றும் ரூ.1000 ரொக்கப்பணம் வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருக்கிறார்.

டோக்கன்கள்:

அதன்படி, 2.20 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் சிறப்பு தொகுப்பு மற்றும் ரொக்கப்பணம் ரூ.1000 வழங்கப்படுகிறது.

இதற்காக நேற்று காலை முதல் ரேஷன் கடை ஊழியர்கள் வீடு, வீடாக சென்று டோக்கன் வினியோகத்தை தொடங்கினார்கள்.. அந்த டோக்கனில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நாள், நேரம் உட்பட விவரங்கள் பதிவாகி உள்ளன.

வருகிற 10ம்தேதி முதல் தமிழகம் முழுவதும் உள்ள 35 ஆயிரம் ரேஷன் கடைகள் மூலமாக பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட உள்ளது. பொங்கல் தொகுப்பு மற்றும் ரொக்கப்பணம் ரூ.1000 வழங்குதல் பணியை முதல்வர் சென்னையில் தொடங்கி வைக்கிறார்..

இந்நிலையில், பொங்கல் பரிசு வினியோகம் ரேஷன் கடைகளில் உள்ள விற்பனை முனைய கருவியில் கார்டுதாரரின் விரல் ரேகை சரிபார்ப்பு வாயிலாக மேற்கொள்ளப்பட வேண்டும் என்று உணவு வழங்கல் துறை ஆணையர் ஹர் சஹாய் மீனா, மாவட்ட கலெக்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக வழிகாட்டுதல் சுற்றறிக்கை ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார்.

பொங்கல் தொகுப்பு:

அதில், “பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகத்தை ஜன.10ம் தேதி முதல் துவக்க வேண்டும். தொடர்ந்து 14ம் தேதி வரை மேற்கொள்ள வேண்டும்… 12ம் தேதி வெள்ளிக்கிழமை ரேஷன் கடைகள் செயல்படும். ரொக்க தொகையுடன் கூடிய பொங்கல் பரிசு வினியோகம் ரேஷன் கடைகளில் உள்ள விற்பனை முனைய கருவியில் கார்டுதாரரின் விரல் ரேகை சரிபார்ப்பு வாயிலாக மேற்கொள்ளப்பட வேண்டும்.

விரல் ரேகை சரிவர தெளிவாக பதிய இயலாத கார்டுதாரர்களுக்கு மட்டும் அவர்கள் நேரில் வருகை தருவது உறுதி செய்யப்பட்டு பதிவேட்டில் கையொப்பம் பெற்று வினியோகம் செய்யப்படலாம்.

முன்னுரிமை:

எக்காரணத்தை முன்னிட்டும் அங்கீகரிக்கப்பட்ட நபர் வாயிலாகவோ இதர நபர் வாயிலாகவோ பரிசு தொகை பெற அனுமதியில்லை.

ரொக்க தொகையுடன் கூடிய பொங்கல் பரிசு தொகுப்பு பெறுவதற்காக வரும் மாற்றுத்திறனாளிகள் முதியவர்களை வரிசையில் நிற்க வைக்காமல் முன்னுரிமை வழங்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, பொங்கல் தொகுப்பு, ரொக்கப்பணத்தை பெற வரும் குடும்ப அட்டைதாரர்கள், எந்த சிரமமும் இன்றி பெறும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

முக்கியமாக, மக்கள் வெயிலில் நிற்பதை தவிர்க்கும் வகையில் சாமியானா பந்தல்கள் ரேஷன் கடைகளில் அமைக்கப்பட்டு வருகின்றன.

இதைத்தவிர, கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments