தமிழக அரசு மருத்துவமனைகளில் 1,021 மருத்துவர் பணியிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் அறிவித்துள்ளார்.
மருத்துவ பணியிடம்:
தமிழகத்தில் மருத்துவ துறை சார்பாக அரசு ஏகப்பட்ட நடவடிக்கையினை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், மூளை, தண்டுவடம் ஆகியவற்றை ஸ்கேன் செய்யும் பொருட்டு அரசு மருத்துவமனையில் ரூ.8.25கோடி செலவில் எம்ஆர்ஐ ஸ்கேன் கருவி அமைக்கப்பட்டுள்ளது. மருத்துவ காப்பீடு மூலமாக இலவசமாகவே ஸ்கேன் செய்து கொள்ளலாம் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார்.
மேலும், அரசு மருத்துவமனைகளில் போதுமான மருத்துவர்கள் இல்லாமல் பொதுமக்கள் அவதிப்பட்டு வருவதாக பல்வேறு கோரிக்கைகள் வைக்கப்பட்டது. அதன் அடிப்படையில், தமிழகத்தில் 1,021 மருத்துவா் காலிப்பணியிடங்கள் கூடிய விரைவில் நிரப்பப்படும் எனவும், 2,242 கிராம சுகாதார செவிலியா் பணியிடங்கள் MRB தேர்வு மூலமாக நிரப்புவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.