தமிழக மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 190 நடமாடும் மருத்துவ முகாம்கள் – அமைச்சர் தகவல்!

  • தென் தமிழக மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவ சிகிச்சைகளை அளிப்பதற்காக 190 மருத்துவ வாகனங்களில் முகாம்கள் நடத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மருத்துவ முகாம்கள்:

  • கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய நான்கு மாவட்டங்களிலும் கனமழையினால் மக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டது.
  • இது போன்ற வெள்ள  சூழ்நிலைகளை இதுவரை கண்டிராத மக்கள் தற்போது அதிலிருந்து இன்னும் மீளாத நிலையில் உள்ளனர்.
  • இந்நிலையில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவ சிகிச்சைகள் வழங்குவது குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் அவர்கள் செய்தியாளர்களிடம் பேசி உள்ளார்.
  • அதில் நெல்லை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் 190 நடமாடும் மருத்துவ வாகனங்களில் முகாம்கள் நடத்தப்படுகிறது.
  • தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரியின் மருத்துவமனை வெள்ளத்தினால் சேதமடைந்துள்ளது.
  • இதனை சரி செய்வதற்கு ஒரு மாத காலமாகும்,
  • அதுவரையில் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்  இதய நோய்களுக்கான சிகிச்சைகள் வழங்கப்படும்.
  • நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் 315 சுகாதார நிலையங்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், இதற்கான சீரமைப்பு பணிகள் விரைவில் நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளார்.
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments