தடையில்லா மின்சாரத்தை வழங்கும் பொருட்டு தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் ஏகப்பட்ட நடவடிக்கையினை மேற்கொண்டு வருகிறது. தமிழ்நாடு மின்வாரியத்தில் பெறப்படும் புகார்களுக்கு நடவடிக்கை தொடர்பாக புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது.
தமிழ்நாடு அரசின் நடவடிக்கை:
தமிழ்நாடு மின்சார வாரியம் ஆனது பல்வேறு காரணங்களினாலும் இரண்டு பிரிவுகளாக தமிழ்நாடு உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் மற்றும் பவர் ஜெனரேஷன் கார்ப்பரேஷன் என்று செயல்பட்டு வருகிறது.
மேலும் தமிழ்நாடு மின் நுகர்வோர் மற்றும் மின்வாரியத்திற்கு இடையிலான சேவைகள் பலவற்றை அரசு தற்போது டிஜிட்டல் மயமாக்கி உள்ளதால் பெரும்பாலான பிரச்சனைகள் எளிதாகி உள்ளது. இருப்பினும் தமிழ்நாடு மின்சார வாரியம் ஆனது மக்களின் குறைகளை அதிவேகத்தில் தீர்க்க வேண்டும் என்று அரசு சார்பாக உத்தரவிட்டுள்ளது.
புகார்களை சரி செய்ய நடவடிக்கை:
அரசு தெரிவித்துள்ள அறிவிப்பின்படி பொதுமக்கள் புகார் கொடுத்த இரண்டு மணி நேரத்திற்குள்ளாக புகார்களை சரி செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக மின் வயர்கள் தொடர்பான பிரச்சனை 5 மணி நேரத்திற்குள்ளும், டிரான்ஸ்பார்ம் பிரச்சினைகள் 10 மணி நேரத்திற்குள்ளும், புதிய மின்சார இணைப்புக்கான கோரிக்கைகளுக்கு 24 மணி நேரத்திற்குள் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.