தமிழில் எழுத படிக்க தெரிந்தாலே தமிழக அரசு வேலை காத்துக் கொண்டிருக்கிறது. அதுவும் ரூ.58,100 வரை சம்பளம் கிடைக்கும். ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் எதிர்வரும் டிசம்பர் 5ம் தேதிக்குள் தமிழ்நாடு பொருளியல் மற்றும் புள்ளியில் துறையில் உள்ள பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்
தமிழ்நாடு பொருளியல் மற்றும் புள்ளியில் துறை காவலர், தூய்மைப் பணியாளர், அலுவலக உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதற்கான ஆட்சேர்க்கை அறிவிப்பு சம்பந்தப்பட்ட துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் எதிர்வரும் டிசம்பர் 5ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
மொத்த காலியிடங்கள்: 9
பணி தரும் நிறுவனம்: தமிழ்நாடு பொருளியல் மற்றும் புள்ளியில் துறை
வேலை வகை: தமிழ்நாடு அரசு வேலை
பணியிடங்கள் விவரம்:
நிரந்தர முழுக் காவலர் 1 ரூ. 15,700 – 58,100 (Level – 1)
தூய்மைப் பணியாளர் 2 ரூ. 15,700 – 58,100 (Level – 1)
அலுவலக உதவியாளர் 6 ரூ. 15,700 – 58,100 (Level – 1)
கல்வி தகுதி: 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்; (தமிழில் கண்டிப்பாக எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும்)
வயது வரம்பு (01.07.2023 அன்றைய தேதியின் படி குறைந்தபட்ச வயது-18 ஆக இருக்கவேண்டும், அதிகபட்சம் 32 ஆக இருக்க வேண்டும். வயது தளர்வு உண்டு, அதிகபட்ச வயதை பொறுத்தவரைர பட்டியல் பழங்குடியினர் -37 வயது வரை விண்ணப்பிக்கலாம். பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்/ மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்/ சீர்மரபினர் – 32 வயது வரையிலும், பொது பிரிவினர் -32 வயது வரையிலும் விண்ணப்பிக்கலாம்
விண்ணப்பிக்கும் முறை : des.tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள மாதிரி விண்ணப்பத்தினை டவுன்லோடு செய்து, உங்களது புதிதாக எடுக்கப்பட்ட பாஸ்போர்ட் சைஸ் கலர் புகைப்படத்தை ஒட்டி,அதில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களை சரியான முறையில் நிரப்பி விண்ணப்பிக்க வேண்டும்.
ஒன்றுக்கும் மேற்பட்ட பதவிக்கு விண்ணப்பிக்க விருப்பம் என்றால். ஒவ்வொரு பதவிக்கும் தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்கும் பதவியின் பெயரை விண்ணப்பத்தில் தெளிவாக குறிப்பிடுவது அவசியம் ஆகும்
எப்படி விண்ணப்பிக்க வேண்டும்: விண்ணப்பத்தில் கலர் புகைப்படம் மற்றும் தகவல்களை நிரப்பி பின்னர். ஆதார் கார்டு, இருப்பிட முகவரி, வயது, கல்வித் தகுதி மற்றும் சாதிச் சான்று குறித்த சான்றுகளின் நகல்களை (ஜெராக்ஸ்) விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்ப வேண்டும். நேர்முகத் தேர்வின் போது நீங்கள் நகலாக அனுப்பிய ஆவணங்களின், ஒரிஜினல் ஆவணங்களை கண்டிப்பாக சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பத்தை எப்படி அனுப்புவது: விண்ணப்பங்கள் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ கீழ்க்கண்ட முகவரிக்கு வந்து சேரும் வகையில் அனுப்பி வைக்கலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய முகவரி : இயக்குநர், பொருள் இயல் மற்றும் புள்ளிஇயல் துறை, டி.எம்.எஸ்.வளாகம் தேனாம்பேட்டை , சென்னை – 600006.
முக்கிய குறிப்பு: விண்ணப்பங்கள் 5.12.2023 மாலை 5.45 மணிக்குள் வந்த சேர வேண்டும். அதன் பின்னர் பெறப்படும் விண்ணப்பங்கள், முழுமையான விவரங்களுடன் பெறப்படாத விண்ணப்பங்கள், உரிய சான்றிதழ்கள் இல்லாமல் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்கப்படாது.
விண்ணப்பதாரர்களுக்கு, விண்ணப்பத்தில் தெரிவித்துள்ள முகவரிக்கு நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம் மற்றும் நாள் குறித்த விவரம் தபால் மூலமாக உங்கள் முகவரிக்கு அனுப்பிவைக்கப்படும். எனவே சரியான முகவரியை சமர்ப்பிக்கவும்.